இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நவராத்திரி பூஜைக்கு உகந்த மலர்கள்!
அம்மனை
வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை வழிபடக்கூடிய
நவராத்திரி விழா வருகிற 29ஆம் தேதி ஆரம்பமாகிறது.
நவராத்திரி
பூஜையின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அம்மனுக்கும் எந்தெந்த மலர்களை கொண்டு பூஜை செய்ய
வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
நவராத்திரி
பூஜையின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அம்மனுக்கு பூஜை செய்யப்படும். அதுபோல் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு பூக்களைக் கொண்டு பூஜை செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஒன்பது
நாட்களுக்கும் ஒவ்வொரு விதமான பூக்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
நாட்களும், பூக்களும் :
முதல்
நாள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம்
நாள் மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மரிக்கொழுந்து
மற்றும் சம்பங்கி மலர்களால் மூன்றாம் நாள் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஜாதிமல்லி
மற்றும் மணமுள்ள மலர்களால் நான்காம் நாள் அர்ச்சனை செய்ய வேண்டும்.
முல்லை
மலர்களால் ஐந்தாம் நாள் அர்ச்சனை செய்ய வேண்டும்.
செம்பருத்தி
மற்றும் சிவப்பு நிறமுள்ள மலர்களைக் கொண்டு ஆறாம் நாள் பூஜை செய்ய வேண்டும்.
மல்லிகை,
முல்லை போன்ற மணமுள்ள மலர்களால் ஏழாம் நாள் பூஜை செய்ய வேண்டும்.
எட்டாம்
நாளில் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நவராத்திரியின்
ஒன்பதாவது நாள் செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு
நாளுக்கும் ஏற்ப ஒவ்வொரு மலர்களை வைத்து அம்பாளுக்கு பூஜை செய்து, வழிபட்டு அம்பாளின்
பரிபூரண அருளைப் பெறுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக