>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 செப்டம்பர், 2019

    அக்டோபர் முதல் எஸ்பிஐ கொண்டுவரும் முக்கிய மாற்றம்- விவரம் உள்ளே


     Image result for SBI
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    SBI New Rules From October 1 : அக்டோபர் 1 முதல், போதுமான இருப்பில்லாதால் நிராகரிக்கப்படும்  ஏடிஎம்  பரிவர்த்தனைக்கு   ரூ.20 ப்ளஸ் ஜிஎஸ்டி தொகையையும் வசூலிக்கும்.
    நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அக்டோபர் 1, 2019 முதல் தனது சேவைக் கட்டணங்களைச் சற்று மாற்றம்  செய்து அமல்படுத்தவிருக்கிறது.
    மாதாந்திர சராசரி இருப்பு (MAB) ஐ பராமரிக்காததால் விதிக்கப்படும் கட்டணங்களை கிட்டத்தட்ட 80% குறைக்கவுள்ளது,மேலும் ஒரு மாதத்தில் 8-10 முறை ஏடிஎம்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பண பரிவர்த்தனைகளையும் வழங்க முடிவு செய்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
    மாதந்திர பராமரிப்புத் தொகை:
    தற்போது, மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திரம் குறைந்தது ரூ .5,000 மற்றும் ரூ .3000 முறையே பராமரிக்க வேண்டும். அக்டோபர் 1 முதல், இந்த குறைந்தபட்ச இருப்பு மெட்ரோ  நகர்ப்புற பகுதி என இரண்டு ரூ .3,000 ஆக மாற்றப் பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச தொகையை பராமரிக்க இல்லை என்றால் முன்போலவே  அபராதத் தொகை விதிக்கப்படும். இருப்பினும் இந்த அபராதம் ரூ .80 ல் இருந்து ரூ .15 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதே சிறப்பம்சமாகும்.
    மேலும், கீழ் சொல்லப்படும் வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்கள் இந்த மாதந்திர பராமரிப்புத் தேவைகளில் இருந்து விடிவிக்கப் படுகிறார்கள் – சம்பள தொகுப்பு கணக்குகள், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு ,சிறு மற்றும் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகள், பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லி உதான் கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூக பாதுகாப்பு நல சலுகைகளைப் பெறுபவர்கள், 21 வயது வரையிலான மாணவர்களுக்கான கணக்குகள்.
    புதிய ஏடிஎம் கட்டண அமைப்பு: 
    வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று பரிவர்த்தனைகள் உட்பட எட்டு இலவச பரிவர்த்தனைகளை வரும் அக்டோபர் ஒன்றில் இருந்து பெறுவார்கள் . பெருநகரங்களில் அல்லாத இடத்தில் அத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் 10 இலவச பரிவர்த்தனைகளைப் பெறுகிறார்கள், இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் ஐந்து மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஐந்து.
    இந்த வரம்பைத் தாண்டிய கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ அபராதமாக ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி 20  என ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கும்.
    அக்டோபர் 1 முதல், போதுமான இருப்பில்லாதால் நிராகரிக்கப்படும்  ஏடிஎம்  பரிவர்த்தனைக்கு  ரூ.20 ப்ளஸ் ஜிஎஸ்டி தொகையையும் வசூலிக்கும்.
    சம்பள கணக்குகளுக்கு ஸ்டேட் வங்கி குழு (எஸ்.பி.ஜி) ஏடிஎம்கள் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில்  இலவச வரம்பற்ற பரிவர்த்தனைகளை வழங்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக