இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மேகலாவுக்கும், சரவணனுக்கும் அஞ்சலி என்ற 2 வயது மகள் இருந்தாள். அஞ்சலிக்கு
வீட்டின் முற்றத்தில் வைத்து அவளின் அம்மா சோறு ஊட்டினாள். முற்றத்தில் சோறு
ஊட்டுவதை மரத்தில் நின்று பார்க்க ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.
காக்காவைக்
காட்டிக் கொண்டே மகளுக்கு மேகலா சோறு ஊட்டுவாலே தவிர, காக்காவுக்கு சோறு
போடமாட்டாள். இன்றும் அதே மாறிதான்... அப்போது அடுப்பில் விசில் சத்தம் கேட்டதால்,
அஞ்சலியை கீழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அம்மா
உள்ளே போனதும், அஞ்சலி கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி
காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, காக்கா இந்தா.. காக்கா
இந்தா என்று சோறு போட்டாள்.
உள்ளே
சென்ற மேகலா திரும்பி வந்து அஞ்சலியை திட்டி விட்டு, அரிசி விக்கிற விலைக்கு
இதுகளுக்கு வேற சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியாகம் பண்றியா?
என்று கூறி காக்கைகளை விரட்டினாள்.
அஞ்சலிக்கு
நாய், பூனை, காக்கா, எறும்பு என எல்லோருமே நண்பர்கள் தான். கையில் என்ன பண்டம்
வைத்திருந்தாலும் போட்டு விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்? அதட்டிக் கொண்டே
சோறூட்டிய மேகலா, விளையாட்டுச் சாமான்களை அஞ்சலியிடம் கொடுத்துவிட்டு, வீட்டு
வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.
அஞ்சலி
முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென
அஞ்சலியின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு மேகலா வெளியே ஓடி
வந்தாள்.
அங்கே
குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது. அம்மா
என் டப்பா.. என்று அழுத அஞ்சலி, அம்மாவை கட்டிக் கொண்டாள். ஒரு நொடியில் நடந்ததை
புரிந்து கொண்டாள் மேகலா.
தன்
மகள் விளையாடிய பாத்திரத்தில் சாப்பிட ஏதேனும் இருக்குமோ? என எண்ணி குரங்கு
பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை
விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.
அஞ்சலி
எல்லா உயிருடனும் நட்பாக இருந்தது தான், அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக
அமைந்தது என எண்ணி ஆச்சர்யப்பட்டாள். அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும் மேகலா
முதலில் காகங்களை கா...கா எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு
உணவூட்டினாள்!
நாய்
மட்டுமல்ல நாம் பாசம் காட்டும் எல்லா உயிரினங்களும் நன்றியுள்ளவையே. கிடைத்ததைப்
பகுந்து கொடுத்து தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக