>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 செப்டம்பர், 2019

    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோவில் -மோகனூர்.

     Image result for அருள்மிகு நாவலடி கருப்பசாமி

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



      கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

    மூலவர் : கருப்பசாமி.

    உற்சவர் : நாவலடியான்.

    அம்மன் : செல்லாண்டியம்மன்.

    தல விருட்சம் : நாவல்.

    தீர்த்தம் : காவிரி.

    பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.

    ஊர் : மோகனூர்.

    மாவட்டம் : நாமக்கல்.

    தல வரலாறு :

    முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு, தூங்கி விட்டனர்.

    மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது, கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசாமி, தானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும் படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து, கருப்பசாமியாக பாவித்து வணங்கினர். இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் நாவலடியான் என்றும், நாவலடி கருப்பசாமி என்றும் பெயர் பெற்றார்.

    பிற்காலத்தில் நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சாமி சுயம்புவாக தோன்றி சுயம்புக்கு தெற்கே உள்ள வேம்புமரத்தை காவல் மரமாக அறிவித்து தரிசித்து வந்தனர். சாமி பட்டுப்போன நாவல் மரத்துக்கு அடியில் இருந்ததால் பட்டமரத்தையன் என்றும் அருகில் இருந்த நாவல்மரத்து நிழலில் இருந்ததால் நாவலடியான் என்றும் பெயர் பெற்றார்.

    தல பெருமை :

    நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சாமி சுயம்புவாக தோன்றியுள்ளது இங்கு சிறப்பு.

    ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுயம்பு மூர்த்தி சாமி பள்ளத்திற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுயம்புவுக்கு பின்புறம் பட்டுப்போன பழங்கால நாவல் மரம் இன்னமும் உள்ளது. இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது.

    இக்கோயிலில் உற்சவர் சன்னதிக்கு எதிரே, பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அருகில் இரண்டு சிறிய குதிரை வாகனங்கள் இருக்கிறது.

    தெரிந்தே தவறு செய்துவிட்டு, மன்னிப்பு வேண்டுபவர்கள் இந்த சூலங்களில் எலுமிச்சம்பழத்தை குத்தி வைத்து, உப்பைக் கொட்டி அதன்மேல் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என சத்தியம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு சத்தியம் செய்ததற்கு சாட்சியாக சாமியின் வாகனங்களான குதிரைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்த வேலை, சக்தி வேல் என்றும் சத்திய வேல் என்றும் சொல்கிறார்கள்.

    பிராத்தனை :

    பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். சாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக