Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 செப்டம்பர், 2019

முருகன் இட்லி கடை உரிமம் ரத்து.. தரமற்ற உணவு தான் காரணம்.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

 உரிமம் ரத்து


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மிகப் பிரபலமான தென்னிந்திய உணவகமான முருகன் இட்லி கடையின் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இங்கு தரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பதாகவும், இதையே மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இதன் படி உணவு தயாரித்து, விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 32 மற்றும் ஒழுங்கு முறைகள் 2011, 2.1.8 (1) இன் படி, இந்த நிறுவனத்தின் உரிமம் எண் : 12417023000521 தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த உணவகம் தமிழகம் முழுவதும் மிகப் பிரபலமானது.

இதன் வரலாறு என்ன?
 கடந்த 1991ஆம் ஆண்டு தமது பெற்றோர்கள் நடத்தி வந்த முருகன் காபி கடைக்கு பொறுப்பேற்ற மனோகரன் பின்னர், இதை முருகன் இட்லி கடை என்றும் பெயர் மாற்றினார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த உணவகம், மதுரையில் 2 கிளைகளையும், சென்னையில் 23 கிளைகளும், வேலூரில் இரு கிளைகளும், காஞ்சிபுரத்தில் ஒன்றும், கிருஷ்ணகிரியில் ஒரு கிளையும், சிங்கப்பூரில் ஒரு கிளைகளையும் கொண்டுள்ளது, லண்டனில் ஒன்றும் உள்ளது கவனிக்கதக்கது.


என்ன பிரச்சனை?
பல இடங்களில் தனது கிளைகளை கொண்ட இந்த உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த உணவகத்தின் பாரிமுனையில் இருக்கும் கிளையில் பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி சென்னையைச் சேர்ந்த டி.ஆர் பிரபாகரன் என்ற வழக்கறிஞர், பகல் உணவு சாப்பிட சென்றிருக்கிறார். அதில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தவர், இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகாரும் செய்துள்ளார்.
ஆனால் கடையில் இருப்பவர்கள் இது இங்கு தயாரிக்கும் உணவே இல்லை என்றும், இது அம்பத்தூரில் தயாரிக்கப்பட்ட உணவு என்றும் கூறியிருக்கிறார்கள். இது தவிர சுகாதாரமற்ற உணவு குறித்து, வாட்ஸ் ஆப் மூலம், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் செய்துள்ளார்.

ஏற்கனவே எச்சரிக்கை
சென்னையில் உள்ள அந்த உணவகத்தின் கிளைகளுக்கு, அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள சமையல் கூடத்திலிருந்து தான், உணவு தயாரிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அங்கு ஏற்கனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலை இருந்துள்ளது.

சமையல் கூடத்தில், பூச்சி கட்டுப்பாட்டு முறைகளும் சரியாக
பின்பற்றபடவில்லை என்றும், மேலும் சமையல் கூடத்திற்கான தரக் கட்டுப்பாடு சான்றும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக இது குறித்து உணவு பாதுகாப்பு துறை, இந்த பிரச்னைகளை சீரமைக்கக் கோரி எச்சரிக்கையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 உரிமம் ரத்து
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், முருகன் இட்லி கடை சமையல் கூடத்தில் ஆய்வு செய்தனர். ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும், சுகாதாரமற்ற சமையல் கூடத்தினை சரி செய்யவில்லை என்றும், மேலும் இதற்கான சரியான விளக்கம் அளிக்கும் வரையில் இந்த சமையல் கூடத்தில், உணவு தயாரிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்தோடு, உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக