Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 செப்டம்பர், 2019

பலவீனத்தைப் பலமாக மாற்றுவோம்..!

 Image result for பலவீனத்தை பலமாக மாற்றுவோம்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




  சிவா என்ற பத்து வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஜூடோ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தீராத ஆசையாக இருந்தது. அவன் இருந்த ஊரிலும் ஜூடோ கற்றுத்தரப் பல பள்ளிகள் இருந்தன. ஆனால், ஒன்று மட்டும்தான் ஜூடோ கற்றுக்கொள்ள அவனுக்குத் தடையாக இருந்தது. என்னவென்றால் ஒரு வருடத்திற்கு முன்னர் அவனுக்கு நடந்த கார் விபத்தில், அவன் தன் இடது கையைப் இழந்துவிட்டான்.

ஆனாலும், அந்த சிறுவனின் தாய், பல ஜூடோ பள்ளிகளை அணுகினார். இரு கைகள் இல்லாமல் ஜூடோவா..? அது மிகச் சிரமம் என்பதே பதிலாகப் பல பள்ளிகளில் கிடைத்தன. ஒரு பள்ளியில் மட்டும் ஜூடோ மாஸ்டர் சிறுவனை சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், வயதில் முதிர்ந்தவராக இருந்தார். எப்போது வர வேண்டும், பயிற்சி நேரம், கட்டணம் எவ்வளவு என்று அனைத்தையும் சிறுவனின் தாயிடம் கூறினார்.

அடுத்த நாள், சிறுவன், குரு சொன்ன நேரத்திற்கு ஜூடோ பள்ளிக்குப் சென்றான். அவர் கற்றுக்கொடுத்த பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தான். மூன்று மாதங்கள் முடிந்தன. நன்றாக பயிற்சி அளித்தார். ஆனால், அவனுக்கு அந்த குரு ஜூடோவில் இருந்த ஒரே ஒரு அசைவையும், நுட்பத்தையும் தான் கற்றுத் தந்திருந்தார்.

ஒருநாள் சிறுவன் எனக்கு ஜூடோவில் ஒரே ஒரு நுட்பத்தை மட்டும்தான் கற்றுக் கொடுத்துள்ளீர்கள், வேறு எதுவும் கற்றுத் தர மாட்டீங்களா? என்று கேட்டான். உண்மைதான். ஜூடோவில் இந்த ஒரே ஒரு நுட்பம் மட்டும்தான் உனக்குத் தெரியும். ஆனால், இதை மட்டும்தான் நீ அவசியம் தெரிஞ்சிருக்கணும். இப்போது நீ போகலாம் என்று கூறிவிட்டார்.

சிறுவன் தன் பயிற்சிக்குத் திரும்பினான். மேலும், பல மாதங்கள் கழிந்தன. அப்போதும் மேற்கொண்டு அவனுக்கு ஜூடோவில் வேறு எந்த நுட்பத்தையும் குரு கற்றுத்தரவில்லை. உள்ள ரில் ஒரு ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள பள்ளியின் சார்பாக அந்தச் சிறுவனின் பெயரையும் குரு கொடுத்திருந்தார்.

சிறுவனுக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். இந்த பள்ளியில் பல மாணவர்கள், ஜூடோவில் பல நுட்பங்களைக் கற்றறிந்தவர்கள். எனக்குப் பல மாதங்களாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தாலும், தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு நுட்பம்தான். இதை வைத்துக்கொண்டு போட்டியில் ஜெயிக்க முடியுமா? ஒரு கையை வைத்துக்கொண்டு என்னால் ஜூடோ போட்டியில் பங்கேற்க முடியுமா? போட்டியில் எனக்கு அடி எதுவும் படாமல் இருக்க வேண்டுமே என்கிற பயம் அவனுக்கு உண்டானது.

இருந்தாலும் சிறுவன் போட்டியில் கலந்து கொள்ள சென்றான். அந்தச் சிறுவன் பங்கேற்ற முதல் போட்டி இதுதான். இந்தப் போட்டியில் இவன்தான் ஜெயித்தான். கூட்டம் அதிசயத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. குரு கற்றுக்கொடுத்த ஒரே ஒரு ஜூடோ நுட்பத்துக்கு இவ்வளவு சக்தியா? சிறுவன் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தான்.

இரண்டாவது போட்டி... அதிலும் அந்தச் சிறுவனுக்கே வெற்றி. மூன்றாவது..? அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கே அவன் தகுதியாகிவிடுவான். மூன்றாவது போட்டி, கூட்டம் மொத்தமும் மூச்சுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அதிலும் அவன் ஜெயித்துவிட்டான். இறுதிப் போட்டி நடக்கும் நாள் வந்தது. போட்டி ஆரம்பமானது. இரண்டுமுறை அந்தச் சிறுவன் கொஞ்சம் தடுமாறினான்.

மூன்றாம் முறை வெற்றி பெற்றுவிட்டான். அந்த ஆண்டு, அந்த நகரத்தில் நடந்த ஜூடோ போட்டியில் அந்த சிறுவன்தான் சாம்பியன். அடுத்த நாள் சிறுவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் குருவிடம் நீங்கள் கற்றுக்கொடுத்த ஒரே ஒரு நுட்பத்தை வைத்துக்கொண்டு நான் எப்படி ஜெயித்தேன்? என்று கேட்டான்.

அதற்கு குரு கூறிய பதில் :

நீ ஜெயித்ததற்கு இண்டு காரணம் தான். ஜூடோவில் எதிராளியைத் தூக்கி வீசியடிக்கிற வித்தையிலேயே கஷ்டமான ஒன்றில் நீ மாஸ்டர் ஆகிவிட்டாய். இன்னொன்று, அந்த நுட்பத்தை உன் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்போது எதிராளி உன் இடது கையைத்தான் இழுக்க முடியும். அது சாத்தியமில்லை. அதனால் தான் நீ ஜெயித்துவிட்டாய் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக