>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 செப்டம்பர், 2019

    அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்


    Image result for அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



     தியாகராஜர் திருக்கோவில் மிகப் பழமையான நாயன்மார்களால் பாடப்பெற்ற தலம். பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம், ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர், சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாக கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவில், தமிழகத்திலுள்ள திருவாரூரில் அமைந்துள்ளது.

    மூலவர் : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.

    அம்மன் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்.

    தல விருட்சம் : பாதிரிமரம்.

    தீர்த்தம் : கமலாலயம்.

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

    புராண பெயர்ஃஊர்ஃமாவட்டம் : திருவாரூர்.

    தல வரலாறு :

     ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

     தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார்.

     வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.

     இவை சப்தவிடங்கத் தலங்கள் எனப்படுகின்றன. சப்தம் என்றால் ஏழு. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத் தலங்கள் உள்ள கோவில்களில் சுவாமியை தியாகராஜர் என்பர்.

     இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்க்கோவிலை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

    தல பெருமை :

     இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

     சனிதோஷம் பிடித்தவர்கள் மற்றும் நவக்கிரகங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தொல்லைகள் நீங்கி சுகம் காணலாம்.

     நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கிறதா என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவேதான் திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் என்பார்கள்.

     தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் திருவாரூர் தேரழகு என்பார்கள்.

     சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

     வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில் தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை நித்திய பிரதோஷம் என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக