Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 செப்டம்பர், 2019

விதிமீறல் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்- புகாரளிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு!

Image result for பேனர்கள் குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ரோந்து வாகனம் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ரோந்து வாகனம் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்:
·         சட்டவிரோத பேனர்கள் குறித்து புகார் அளிக்க வேண்டுமா?
·         இதோ செல்போன் எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண், பள்ளிக்கரணை சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் நிலைதடுமாறி சாலையில் சாய்ந்தார். இந்த சூழலில் அந்த வழியே வேகமாக வந்த தண்ணீர் லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே சட்டவிரோதமாக பேனர்களை வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது.


ஆனால் அதனை யாரும் முறையாக பின்பற்றாத சூழலில், சுபஸ்ரீ சம்பவத்தால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மிகவும் கண்டித்தனர். அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து தொண்டர்களுக்கு விதிமீறல் பேனர்களை வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களும் பேனர் வைக்க வேண்டாம் என்ற அறிவுரையை வழங்கினர். விதிமீறல் பேனர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பேனர்களை கண்காணிக்க செல்போன் சேவையுடன் கூடிய ரோந்து வாகனங்கள் இனி ரோந்து செல்லும். இந்த அதிகாரிகளிடம் 94451 90205, 94451 90698, 94451 94802 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.

புகார் தெரிவித்தால் ரோந்து வாகனப் பிரிவில் இருக்கும் அதிகாரிகள் உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்வார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக