இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நினைப்பு
தான் பிழைப்பை கெடுக்குமாம்..! இதற்கு என்ன அர்த்தம்? வாங்க பார்க்கலாம்.
ஒரு
ஊரில் சோம்பேறி ஒருவன் இருந்தான். வீடு வீடாக சென்று பிச்சையெடுத்து உண்பதுதான்
அவனுடைய வேலை. எந்த வேலைக்கும் செல்ல விரும்பாத அவனுக்கு பெரிய பணக்காரனாக
வேண்டும் என்ற கனவு மட்டும் இருந்தது.
ஒரு
முறை அவன் பிச்சையெடுக்கும்போது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை
கொடுத்தார்கள். பானை நிறைய பால் கிடைத்த சந்தோத்தில் அவன் அதை வீட்டிற்கு
கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை தயிராக்குவதற்காக
உரையூற்றி ஒரு உறியில் தொங்கவிட்டான்.
பிறகு
தனது குடிசையில் உள்ள கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு மெல்ல யோசிக்க
ஆரம்பித்தான். காலையில் இந்த பானையில் உள்ள பால் முழுவதும் தயிராகியிருக்கும்.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணெய்யை காய்ச்சினால் நெய் கிடைக்கும்.
அதை பக்கத்து ஊர் சந்தைக்கு கொண்டு சென்று விற்று நல்ல லாபம் பார்ப்பேன்.
பின்னர்
அதை வைத்து ஒரு ஜோடி ஆடுகள் வாங்குவேன். ஆடுகளை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்ப்பேன்.
இரண்டும் விரைவில் நான்காகும். அந்த நான்கு ஆடுகளும் அப்படியே எட்டாகும். ஒரு
ஆட்டுப் பண்ணையே வைக்கும் அளவிற்கு என்னிடம் ஆடுகள் இருக்கும். ஆடுகளை அப்படியே
சந்தையில் விற்றுவிட்டு இரண்டு பசுக்கள் வாங்குவேன். பசுக்கள் மூலம் பால்
வியாபாரம் செய்து நன்கு பொருளீட்டுவேன்.
பசுக்கள்
பல்கி பெருகும். அடுத்து அதை வைத்து குதிரைகளை வாங்குவேன். குதிரைகளும் பல்கி
பெருகும். குதிரைகளை அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் விற்பேன்.
இப்படி நான் செல்வந்தனானவுடன் எனக்கு பலர் பெண் தர முன்வருவார்கள்.
ஒரு
அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்துவேன். எனக்கு ஒரு
மகன் பிறப்பான். அவனை நான் கொஞ்சி மகிழ்வேன். மகன் தவழும் பருவத்தில்,
தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான். குதிரைகள் குழந்தையை
மிதித்துவிட்டால் என்ன செய்வது? அப்போது எனக்கு கோபம் தலைக்கேறும்.
குழந்தை
குதிரைக்கு அருகே செல்வதைக்கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்? என்று
என் மனைவியை எட்டி உதைப்பேன் என்று நினைத்துக் கொண்ட நேரத்தில், கயிற்றுக்
கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவன், தன்னை மறந்து கால்களை தூக்கி உதைக்க, மேலே
உறியில் தொங்கவிடப்பட்டிருந்த பானை கால்பட்டு உடைந்து கீழே விழுந்து எல்லா பாலும்
கொட்டிவிடுகிறது.
இதுதான்
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்று கூறுவதற்கான அர்த்தம். இலக்குகளை அடைய
உழைக்காமலும், செயலாற்றாமலும் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களும் இவனைப் போல தான்.
வாழ்க்கையில் வெற்றி பெற கனவு காண்பதற்கும், கனவு மட்டுமே காண்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக