இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது காந்தல்.
இங்கு பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள்
வாய்ந்தது. நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்பது
குறிப்பிடத்தக்கதாகும். சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளனர்.
மூலவர்
: காசிவிஸ்வநாதர்
அம்மன்
: விசாலாட்சி
புராண
பெயர் : திருக்காந்தல்
ஊர்
: ஊட்டி
தல பெருமை :
பாணலிங்கத்திற்கு இயற்கையிலேயே பூணூல் அணிவது
போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக
லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம். பாண
லிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த
புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல்
அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின்
முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல்,
பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும்.
தல வரலாறு :
இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882-ல் ஏகாம்பர
தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை
மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி
முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய
வந்தார். இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால்
இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின்
வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர்
காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு
ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள்
உள்ளது.
பிராத்தனை :
இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி
கிடைக்கிறது என்பது சிறப்பாகும்.
ஆலயத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதரை
மனமுருகி வேண்டினால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது
ஐதீகமாக இருந்து வருகிறது.
காசிவிஸ்வநாதருக்கு பால், எண்ணெய், இளநீர்
ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவையை
இந்த கோவிலில் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
சிறப்புகள் :
இந்த கோவிலில் மகாசிவராத்திரி கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டு அன்றும் திருவிழா நாட்களிலும்
பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
பிரதோஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்துக்கு
குறைவில்லை.
சன்னியாசம்
பெற, உபதேசம், ஞானம் பெற இந்த யோக தட்சிணா மூர்த்தியை வணங்குவது மிகவும் சிறப்பு
வாய்ந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக