>>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 4 அக்டோபர், 2019

    அருள்மிகு ஏகவுரி அம்மன் கோவில் வல்லம்

    Image result for அருள்மிகு ஏகவுரி அம்மன் கோவில் வல்லம்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




     அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் இந்த சிறப்பு மிக்க ஆலயமான அருள்மிகு ஏகவுரி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.

    அம்பிகையின் உக்கிரமான முகம், பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும், மேலேயுள்ள தலை அவர்களுக்கு நல்லதை அருளும் முகமாகவும் இருக்கிறது.

    தலவரலாறு :

    பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான்.

    அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, ஏ கவுரி! சாந்தம் கொள் (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். எனவே சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு ஏகவுரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

    தல பெருமை :

    மங்கலம் தரும் மஞ்சள் :

    அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    காக்கும் தெய்வம் :

    தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல் நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு.

    தல சிறப்பு :

    வழக்கமாக அம்பாள் கோவில்களில், எலுமிச்சை கனிகளைத்தான் தருவார்கள். ஆனால் இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும்.

    பிராத்தனைகள் :

    குழந்தை பாக்கியம் கிடைக்கவும், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்கள் வழிபடும் தலம் இது.

    நேர்த்திக்கடன் :

    நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் பூக்குழி இறங்கியும், முருகனுக்குரிய வழிபாடான பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக