Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

பிரிந்தது பிஞ்சு மூச்சு..!! நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தை சுர்ஜித்!!

பிரிந்தது பிஞ்சு மூச்சு..!! நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தை சுர்ஜித்!!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


திருச்சி: சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் அனைவரும் வேதனைக்குள்ளாகியுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் குழந்தையின் உடற்கூராய்வுக்குப்பின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 
குழந்தை சுஜித்துக்காக தமிழகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் பிராத்தனைகள் நடைபெற்றது. பொதுமக்கள் உட்பட அரசு நிர்வாகமும் சுஜித்தை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும் இறுதியில், இந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டான். அந்த குழந்தையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை உள்ள நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 65 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வந்தது என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
குழந்தையை மீட்கும் பணி எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மீட்புப் பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனினும் குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்படாது. ஆழ்துளை கிணறு தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும், மழை பெய்தாலும் தொடர்ந்து நடைபெறும். பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
டங்ஸ்டன் கார்பைடு உள்ள எந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது. குழந்தை தொடர்ந்து 88 அடி ஆழத்தில் உள்ளது. தற்போது துளையிட்டு வரும் இடத்தின் கீழே கரிசல் மண் இருக்கக்கூடும் என்பதால் தொடர்ந்து குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. மொத்தம் 98 அடி ஆழத்திற்கு குழி தோண்டபடவுள்ளது. முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரம் ஆகும் என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக