இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெட்ரோல்
பங்க்கில் ரூ.1.74 லட்சத்தைத் தவறவிட்டுச் சென்ற வாடிக்கையாளரின் பணத்தைப்
பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனைக் கைதிகளை அனைவரும்
பாராட்டிவருகின்றனர்.
வேலூர்,
கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும்
பெட்ரோல் நிலையங்கள், கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டுவருகின்றன. தமிழகச்
சிறைத்துறை, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
புதுக்கோட்டையில், சிறைச்சாலை அருகே செயல்படும் பெட்ரோல் பங்க்கில், திருச்சி
மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 தண்டனைக் கைதிகள்
பணியாற்றுகின்றனர். தண்டனைக் கைதிகள் வாடிக்கையாளர்களிடம் காட்டும் கனிவால்,
பெட்ரோல் பங்க்கிற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த
நிலையில்தான், புதுக்கோட்டை அருகே உள்ள பரம்பூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர்,
தனது டூவீலரில் பெட்ரோல் போட வந்துள்ளார். பெட்ரோல் போட்டுவிட்டுக்
கிளம்பும்போது,தனது கையில் வைத்திருந்த பையை அங்கேயே வைத்துவிட்டுச்
சென்றுவிட்டார்.
அங்கு
பணிபுரிந்துவந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் கார்த்திக், புஷ்பராஜ் ஆகியோர் பையை
எடுத்துப் பார்த்தபோது, அதில் ரூ.1.74 லட்சம் இருந்துள்ளது. நேர்மையுடன் அந்தப்
பணத்தை சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர். உடனே,
பணத்தைத் தவறவிட்டவர் குறித்து விசாரித்து, தவறவிட்ட வாடிக்கையாளர் ஜானகி ராமனை
வரவழைத்து, பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கைதிகளை சிறைக்
கண்காணிப்பாளர் பாராட்டினார். இதுபற்றி சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி
பிரியதர்ஷினி பேசியபோது, "ஆயுள் தண்டனைக் கைதிகள் நேர்மையுடன்
செயல்பட்டதால், உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கைதிகளின் இந்தச் செயலால், பொதுமக்களிடம் மேலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கைதிகளின் இதுபோன்ற செயல்கள், அவர்களின் விடுதலைக் காலங்களில் பெரும் உதவியாக
இருக்கும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக