இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆப்ஸ்களில் தீங்கிழைக்கும் மால்வேர்
அல்லது ஆட்வேர் ஏதேனும் இருப்பின், அதை கண்டறிந்து அதை அன்இன்ஸ்டால் செய்ய சொல்வதற்கும்
அல்லது அப்டேட் செய்ய சொல்வதற்கும் பெயர்போன செக் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின்
(Check Point Research) சமீபத்திய அறிக்கையானது ஆண்ட்ராய்டு பயனர்களின் பீதியை கிளப்பும்
வண்ணம் ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அதவாது, மிகவும் பிரபலமான பல ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில்
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே சில பாதிப்புகள் (Vulnerabilities) தொடர்ந்து இருந்த
வண்ணம் உள்ளது என்று கூறி, அந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
பீதியான விடயம் என்னவென்றால், அந்த பட்டியலில் நாம் அனுதினமும் பயன்படுத்தும் சில ஆப்ஸ்களும்
உள்ளன.
கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இருந்து!
LiveXLive, Moto Voice BETA மற்றும் Yahoo! Transit
வெளியான அறிக்கையின்படி, 50,000,000 க்கும்
மேற்பட்ட பதிவிறக்கங்களை கொண்ட லைவ்எக்ஸ்லைவ் ஆப் ஆனது (தொகுப்பு பெயர்
com.slacker.radio) “libLibFlacWrapper.so” என அழைக்கப்படும் vulnerable library-ஐ
கொண்டுள்ளது. இதேபோல 10,000,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட மோட்டோ
வாய்ஸ் பீட்டா ஆப் ஆனது (தொகுப்பு பெயர்: com.motorola.audiomonitor)
“libflacencoder.so, libvasflacencoder.so” என அழைக்கப்படும் vulnerable library-ஐ
கொண்டுள்ளது. சுமார் 10,000,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட யாஹூ
டிரான்சிட் ஆப் ஆனது (தொகுப்பு பெயர்: jp.co.yahoo.android.apps.transit) “libyjvoice-4.6.0.so”
என அழைக்கப்படும் vulnerable library-ஐ கொண்டுள்ளது.
Yahoo! Browser, Yahoo! MAP Yahoo! மற்றும் Car
navigation 
சுமார்
10,000,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட யாஹூ ப்ரவுஸர் ஆப் ஆனது
(தொகுப்பு பெயர்: jp.co.yahoo.android.apps.transit) “libyjvoice-4.7.0.so” என
அழைக்கப்படும் vulnerable library-ஐ கொண்டுள்ளது. அதேபோல 5,000,000 க்கும்
மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட யாஹூ மேப் ஆனது (தொகுப்பு பெயர்:
jp.co.yahoo.android.apps.map) “libyjvoice-4.6.0.so” என அழைக்கப்படும் vulnerable
library-ஐ கொண்டுள்ளது மேலும் வெளியான அறிக்கையின்படி சுமார் 5,000,000 க்கும்
மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட யாஹூ கார் நேவிகேஷன் ஆப் ஆனது (தொகுப்பு பெயர்:
jp.co.yahoo.android.apps.navi) “libyjvoice-wakeup-4.6.0.so” என்று அழைக்கப்படும்
vulnerable library-ஐ கொண்டுள்ளது.
Mobile
Legends: Bang Bang, Smule மற்றும் JOOX Music
மொபைல்
வீடியோ கேம் ஆன Mobile Legends: Bang Bang ஆனது கடந்த 2015 முதல் CVE-2015-8271
(FFmpeg RTMP video streaming) மூலம் பாதிக்கப்படுகிறது. சி.வி.இ -2015-8271
(FFmpeg RTMP வீடியோ ஸ்ட்ரீமிங்) மூலம் 2015 முதல் ஸ்மூல் பாதிக்கப்படுகிறது.
ம்யூசிக் ஆப் ஆன Smule ஆனது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் CVE-2015-8271 (FFmpeg
RTMP video streaming) மூலம் பாதிக்கப்படுகிறது. இதேபோல JOOX Music ஆனதும் கடந்த
2015 ஆம் ஆண்டு முதல் CVE-2015-8271 (FFmpeg RTMP video streaming) மூலம் பாதிக்கப்படுகிறது.WeChat, AliExpress மற்றும் Video MP3 Converter
Lazada, VivaVideo, Retrica மற்றும் TuneIn
ஆன்லைன் ஷாப்பிங் ஆப் ஆன லாசாடா, கடந்த 2016 முதல் CVE-2016-3062 (FFmpeg libavformat media handling) மூலம் பாதிக்கப்படுகிறது. வீடியோ எடிட்டிங் ஆப் ஆன VivaVideo ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் CVE-2016-3062 (FFmpeg libavformat media handling) மூலம் பாதிக்கப்படுகிறது. இதேபோல ரெட்ரிகா மற்றும் ட்யூன்இன் ஆகிய ஆப்ஸ்களும் கடந்த 2016 முதல் CVE-2016-3062 (FFmpeg libavformat media handling) மூலம் பாதிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் Facebook, Messenger மற்றும் SHAREit கூட உள்ளது!
வெளியான
செக் பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்
CVE-2015-8271 (FFmpeg RTMP video streaming) மூலம் மூலம் பேஸ்புக்
பாதிக்கப்படுகிறது. அதேபோல கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் CVE-2015-8271 (FFmpeg RTMP
video streaming) மூலம் பிரபல மெசஞ்சர் ஆப் பாதிக்கப்படுகிறது. இதேபோல மற்றொரு
பிரபலமான ஷேரிட் ஆப் ஆனது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் CVE-2015-8271 (FFmpeg RTMP
video streaming) மூலம் 2015 முதல் பாதிக்கப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள இந்த
பிரபலாமா ஆப்ஸ்களை யாருமே அன்இன்ஸ்டால் செய்ய விரும்ப மாட்டோம் என்பது வெளிப்படை.
இருப்பினும் பயனர்கள் சற்று கவனமாக இருக்கமாறு பரிந்துரைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக