Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 நவம்பர், 2019

ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. சீனா இகாமர்ஸ் நிறுவனங்களின் அடாவடியால் அதிர்ந்த அரசு. அதிரடி முடிவு

 சுங்க வரி  



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

வெளிநாடுகளில் இருந்து ரூ.5000க்குள் அனுப்பபடும் பரிசு மற்றும் சாம்பிள் பொருட்களுக்கு இந்தியாவில் வரி இல்லை. இதை தவறாக பயன்படுத்திக்கொண்டுள்ள சீனாவின் இணைய வழி வர்த்தக நிறுவனங்கள்(இகாமர்ஸ்) நிறுவனங்கள், ஆர்டர் செய்யும் இந்தியர்களுக்கு தினசரி அனுப்பி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா 5 ஆயிரத்துக்குள் பரிசுபொருட்களை அனுப்புவோருக்கு வரி இல்லை என்ற திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் வியாபாரம் அகல பாதாளத்தில் இருப்பதால் வர்த்தகர்கள் மிகவும் நொந்து போய் கிடக்கிறார்கள். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்குள் அனுப்பப்படும் கிப்ட் மற்றும் சாம்பிள் பொருட்களுக்கு வரி இல்லை என்பதை சீனாவின் இகாமர்ஸ் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருவது அம்பலமாகி வருகிறது.

 இதன் மூலம் 5 ஆயிரத்துக்குள் விற்கப்படும் பொருட்களை கிப்ட் என்ற பெயரில் கட்டபடி பார்சல்கட்டி கார்கோவிலும், துறைமுகங்களிலும் அனுப்பி வைத்து வருகிறது. இதை பார்த்து மிரண்டு போன இந்திய அதிகாரிகள், சீன இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு எப்படி மூக்கணாங்கயிறு கட்டுவது என்று யோசித்து வந்தனர்.
சுங்க வரி
இந்நிலையில் மொத்தமாக இந்தியா 5 ஆயிரத்துக்குள் பரிசுபொருட்களை அனுப்புவோருக்கு சுங்க வரி இல்லை என்ற திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்கவரிகள்
இது தொடர்பாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, வரிவிதிப்பு மற்றும் சுங்க வசூல் தொடர்பான கொள்கையை வகுக்கும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐடிசி), ஒரு தனிநபருக்கு எத்தனை பரிசுகளைப் பெறலாம் என்பதைக் இப்போது வரை ஒரு கருத்தை கொண்டிருந்தது, ஆனால் அதை சீன இகாமர்ஸ் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்திய காரணத்தால் செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
நான்கு பரிசுகள்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் . "நாங்கள் இதை தடுக்க பல சட்ட விருப்பங்களை எதிர்பார்த்து கொண்டு உள்ளோம். தனிநபருக்கு நான்கு (பரிசுகளின்) எண்ணிக்கை என்று தான் இப்போது உள்ளது.. ஆனால் இதை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம், எனவே மொத்தமாக அனுமதியைத் தடைசெய்யும் கொள்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்கள்.
பரிசு பொருட்கள்
கடந்த ஆண்டு நவம்பரில் சுங்கத் துறை அதிகாரிகள் இணையவழி இறக்குமதிகள் அனைத்தும் பரிசு பொருள் என்று இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு தொடங்கி, அனைத்து எக்ஸ்பிரஸ் சரக்கு துறைமுகங்களிலும் இதுபோன்ற தொகுப்புகளை அனுமதிப்பதைத் தடுப்பதற்கான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டது, இதுநாட்டிற்கு வரும் பரிசுகளின் எண்ணிக்கையை பெரிய அளவில் தடுத்தது. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று பெரிய நகரங்களுக்குத் தான் எக்ஸ்பிரஸ் சரக்கு துறைமுகங்களில் இருந்து 90% இறக்குமதியைக் கொண்டுள்ளன, அவை பரிசுகளை அனுமதிப்பதைத் தடுத்துள்ளன. மற்ற துறைமுகங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பை குறைத்தல்
பரிசு பொருள் மூலம் இறக்குமதி செய்வதற்கு எதிராக கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருந்த போதிலும் இறக்குமதிக்கான மற்றொரு வழியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தனிப்பட்ட இறக்குமதிகளுக்கு அதிக வரிகளை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சீன இணையவழி நிறுவனங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி நிறுவனங்கள்
மும்பை துறைமுகம் வழியாக சீன நிறுவனங்களான ஷீன் மற்றும் கிளப் தொழிற்சாலைகளுக்கு இறக்குமதியாளர்களாக செயல்பட்டு வரும் சினோ இந்தியா எட்டெயில் மற்றும் குளோப்மேக்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கண்டெய்னர்களை பறிமுதல் செய்ததாக பிரபல ஆங்கில ஊடகமான எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஜூன் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

பி 2 பி இறக்குமதி

இரு நிறுவனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை குறைத்து மதிப்பிடுவது (விலையை குறைத்து) கண்டறியப்பட்டது. "பி 2 பி இறக்குமதியாக (கம்பனி டு கம்பனி) வரவேண்டியவை பி 2 சி (கம்பனி டு கஸ்டமர்) இறக்குமதியாக வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கிருந்தாலும் இறக்குமதி அளவுகள் அதிகரித்து வருவதைக் கண்டால், அதைப் பார்த்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என்று சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விற்பனையாளர்கள்
நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள இணையவழி விற்பனையாளர்களால் சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செயப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து மத்தியஅரசு தொழில்துறையினரிடமிருந்து தீவிரமாக கருத்துக்களை பெற்று வருகிறது
நிச்சயம் அரசு எடுக்கும் 
இப்போதைக்கு, அரசு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சுங்கத்துறையுடன் இணைந்து விரிவான இணையவழி கொள்கைக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அரசு வெளியிட்டிருந்த வரைவுக் கொள்கையில் உலகளாவிய மற்றும் உள்ளூர் அனைத்து இணையவழி நிறுவனங்களும் தங்களை இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.எனவே பரிசு பொருட்கள் மூலம் இணையவழி வியாபாரம் செய்வது, இறக்குமதியின் போது பொருட்களின் மதிப்பை குறைத்து காண்பித்து இறக்குமதி செய்வது போன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக