Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 30 நவம்பர், 2019

சம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளே



தூக்கம் என்பது மிக முக்கியம் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



தூக்கம் முறையாக இருந்தால் அடுத்தநாள் நமக்கே அறியாமல் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். வாழ்வில் தூக்கமும் வேண்டும் என்று கூறிவிட முடியாக வாழ்வில் தூக்கம் என்பது ஒரு முக்கிய அங்கம். முறையான தூக்கம் இல்லாதவர்கள் அடுத்தநாள் செய்யும் வேலையிலும் கோட்டை விடுவார்கள், நண்பர்கள் மற்றும் பேசுபவர்களிடம் கோபமாகவும் காட்டமாகவும் நடந்து கொள்வார்கள்.
தூக்கம் என்பது மிக முக்கியம்
தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நிறுவனம் ஒன்று நூறுநாள் வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு விதிமுறைகளும் உள்ளது. நமக்கு அறிந்த நண்பர்கள் சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள், இரவில் என்ன நடந்தாலும் தூக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் அப்படி யாராவது இருந்தால் அவர்கள் இந்த வேலைக்கு மிகச்சரியாக பொருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது வேலை என்ன:
கரும்பத்திண்ண கூலி கிடைத்தால் வேண்டாம் என்றா உள்ளது இங்கு ஒரு நிறுவனம் கரும்பும் கொடுத்து அதை சாப்பிடுவதற்கு கூலியும் கொடுக்கிறது. நமது வேலை சாப்பிட்டால் மட்டும் போதும். அந்த நிறுவனம் கூறும் விதிமுறைகளும், அதன் நோக்கத்தையும் பார்ப்போம்.
இந்தியாவில் ஸ்லீப் இன்டர்ன்ஷிப்:
பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் 9 மணி நேரம் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்குகிறது. இந்த நிறுவனம் வழங்கப்படும் ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பில் 100 நாட்கள் பங்கேற்க வேண்டும் தினமும் 9 மணிநேரம் முறையாக தூங்கினால் போதும்.
ஸ்லீப் இன்டர்ன்ஸிப் நடத்தும் நிறுவனம்
ஸ்லீப் இன்டர்ன்ஸிப்பில் 100 நாள் பங்கேற்றால் ரூ.1 லட்சம் வழங்குகிறது என்றால் சற்று கேள்வி எழும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் தூக்க முறைகளை கண்காணிக்கும் பொருட்டு ஸ்லீப் இன்டர்ன்ஸிப் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் வேக்ஃபிட் புதுமைகள் பிரைவேட் லிமிடெட்.
ஸ்லீப் இன்டர்ன்ஷிப் எதற்கு
ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்பது தூக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கான ஒரு முயற்சியாகும், நம் வாழ்வில் வேலைக்கும் தூக்கத்திற்கும் ஒருங்கிணைந்த நேரம் ஒதுக்கப்படுகிறதா, மக்களின் தூக்க முறை எந்த மாதிரி உள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் பொருட்டு வேக்ஃபிட் நிறுவனம் இன்டர்ன்ஷிப் நடத்துகிறது.
ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நிறுவனம் வழங்கிய மெத்தையில் 9 மணிநேரம் 100 நாட்கள் தூங்க வேண்டும். மெத்தை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் ஒரு ஸ்லீப் டிராக்கரைப் பயன்படுத்தப்படும் அதன்மூலம் உங்களின் தூக்கமுறை கண்காணிக்கப்படும்.
டிரஸ்ஸிங் கோட் மற்றும் முக்கிய கோரிக்கை:
பயிற்சியாளர்கள் தங்கள் 'வேலை' நேரங்களில் மடிக்கணினியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிரஸ் கோட் என்றால் பைஜாமாக்கள் தான் அணிய வேண்டும். ஏனென்றால் பைஜாமாக்கள் அணியும் போதுதான் நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்றும் அப்போது காணும் கனவுகளும் நினைவாகும் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் வேலை என்ன?
சற்று தூங்குங்கள். உங்களால் முடிந்தவரை, உங்களால் முடிந்தவரை ஆழமாகவும், உங்களால் முடிந்தவரை போட்டித்தன்மையுடனும் தூங்குங்கள் என்கிறது நிறுவனம் மீதமுள்ள அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறது நிறுவனம். 

திறன்கள் தேவை 


தூக்கத்தின் மீது அதி தீவிர ஆர்வம் மற்றும் உள்ளார்ந்த திறன் இது இருந்தால் போதும். நீங்கள் தூங்கும் போது அதில் யாரும் இடையூறு செய்ய முடியாது என்ற ஒரு வைராக்கியம் வேண்டும் அவ்வளவு தான். 
ஊதியம் எவ்வளவு, ஜாப் அப்ளை லிங்க்: 
நிறுவனம் கூறியபடி, 100 நாட்கள் தினசரி 9 மணி நேரம் தூங்கினால் 100 நாட்கள் முடிந்து புறப்படும் போது ரூ. 1 லட்சம் ஊதியம் வழங்கப்படும். நிறுவனத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஜாப் அப்ளை லிங்க்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக