இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
4ஜி
நெட்வொர்க்கில் நிறைய நன்மைகள் இருந்தாலும், 2ஜி வேணுமா அல்லது 4ஜி
நெட்வொர்க்குக்கு மாறணுமா என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்ய வேண்டும் என்று
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமே
இந்தியாவில் முற்றிலும் 4ஜிசேவையை மட்டும் வழங்கி வருகிறது. மற்ற ஏர்டெல், வோடபோன்
ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 4ஜி சேவை வைத்திருந்தாலும் 2ஜி மற்றும 3ஜி சேவைகள்
மட்டும் செயல்படும் தொலைப்பேசி வைத்துள்ளவர்களுக்கும் சேவை வழங்கி வருகிறது.
இந்நிலையில்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் , இந்தியாவை 2ஜி சேவை இல்லா நாடாக அறிக்க அரசு மற்றும்
டிராய் அமைப்பு கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
இதனிடையே
2ஜி சேவை வாடிக்கையாளர்களின் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் ஏர்டெல், மற்றும்
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஜியோவின் இந்த கோரிக்கைக்கு கடுமையாக பதிலடி
கொடுத்துள்ளன. 4ஜி நெட்வொர்க்கில் நிறைய நன்மைகள் இருந்தாலும், 2ஜி வேணுமா அல்லது
4ஜி நெட்வொர்க்குக்கு மாறணுமா என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்ய வேண்டும்
என்று ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கட்டாயப்படுத்த முடியாது
இது
தொடர்பாக பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று
நிறுவனங்களின் சங்கமான செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஓஏஐ)
இன் டைரக்டர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில். "ஆபரேட்டர்கள் ஒரு
நெட்வொர்க்கிற்குச் செல்ல விரும்புகிறார்கள், அது அவர்களுக்கும் பணத்தை
மிச்சப்படுத்துகிறது, ஆனால் அவர்கள் செய்ய விரும்ப வில்லை என்றால் அதை செய்யுமாறு
மக்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது, சந்தையில் எது வேண்டும் என்பதை
வாடிக்கையாளரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.
நம்புகிறேன்
மேலும்
அவர் கூறுகையில், "நம்முடைய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் நிறைய
வாடிக்கையாளர்களை 4 ஜி நெட்வொர்க்கிற்கு நகர்த்த முயற்சிக்கிறார்கள் என்று நான்
நம்புகிறேன், ஆனால் அவர்கள் வாடிக்கையாளரிடம் இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என
வசதிகளை குறுக்கிக்கொள்ள அனுமதிக்க முடியாது" என்றார்.
டேட்டா சேவை
இதனிடையே
தொலைத்தொடர்பு துறை நிர்வாகி ஒருவர் 2ஜி சேவைகள் குறித்து கூறுகையில் "குரல்
சேவையின் பெரும்பகுதி இன்னும் 2 ஜி யில் உள்ளது, மேலும் 2 ஜி மற்றும் 4 ஜி
ஸ்பெக்ட்ரம் இரண்டையும் கொண்ட நிறுவனங்களுக்கு, குறைந்த அலைவரிசையை குரலுக்காக
உகந்ததாக்க முடியும், அதே நேரத்தில் 4ஜி மட்டும் வைத்துள்ள நிறுவனம், டேட்டா
சேவையை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். 2G மற்றும் 4G இல் வங்கி OTP கள்,
உள்பட பல செயல்பாடுகள் வேலை செய்கின்றன, எனவே சிலர் 2G இல் இருக்கவே
விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் (இணையம்)டேட்டாவை பயன்படுத்துவதில் ஆர்வம்
காட்டவில்லை . மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில், பாதி இன்று 4 ஜி கைபேசிகளைப்
பயன்படுத்துகிறார்கள் என்றார்.
2ஜி சேவை வைத்துள்ளவர்கள்
இன்னும்
40 கோடி மக்கள் 2ஜி சேவையைத்தான் பயன்படுத்துவதாக ஏர்டெல் டிராய்க்கு கடிதம்
அனுப்பி இருந்தது. மேலும் அக்கடிதத்தில் ஐயூசி கட்டணங்களை ரத்து செய்யும் முடிவினை
டிராய் திரும்ப பெறுவதே நல்லது என்று கூறியிருந்தது. இதற்கு ரிலையஸ் ஜியோ
எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
திடீர் கோரிக்கை
இந்தியாவில்
பெரும்பாலான மக்கள் மலிவு விலை காரணமாக குரல் அழைப்பு இலவசமாக வந்தால் போதும்
என்று 2ஜி சேவையை தொடர்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் ஏர்டெல் மற்றும் வோடபோன்
ஐடியா நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த சில நாளில் , ஜியோ நிறுவனம்
2ஜி சேவை இல்லா நாடாக இந்தியாவை மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக