Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால், பூ இருந்தால் என்ன பொருள்? எது அபசகுனம்? பரிகாரம் என்ன?




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கோவிலில் அர்ச்சனைக்காக உடைக்கப்படும் தேங்காயில் நிறைய குறியடுகள் இருக்கின்றன. அதை வைத்து நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா என்றும் தெரிந்து கொள்வார்கள். அப்படி உடைக்கப்படும் தேங்காய் எப்படியிருந்தால் என்ன பயன் என்பது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

சாமிக்கு தேங்காய்


பொதுவாக நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்ற பொழுது, முதலில் வாங்குவது அர்ச்சனைப் பொருள்கள் தான். குறிப்பாக, பூ, கற்பூரம், தேங்காய், பழங்கள் தான். அதில் மற்ற தேங்காயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் மேலிருந்தே பார்த்து நலல்லதா வாங்கி விட முடியும். ஆனால் தேங்காயை மட்டும் அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா என்று மட்டும் கண்டுபிடித்து, நன்கு முற்றிய நல்ல தேங்காயாகப் பார்த்து வாங்குவார்கள். அதைத்தாண்டி கொப்பரையாக இருக்கிறதோ அல்லது பூ விழுந்திருக்கிறதோ என்பது பற்றி கண்டுபிடிக்கத் தெரியாது.

பூஜை தேங்காய்


அப்படி பூஜை தேங்காயில் பூ விழுந்தாலோ அல்லது அழுகி இருந்தாலோ அது அபசகுனம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சாஸ்திரப்படி எது நல்லது, எது அபசகுனம் என விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கடவுளுக்கு அர்ச்சனை செய்கின்ற பொழுது, ஏன் தேங்காயை உடைக்கிறோம் என்ற தாத்பர்யம் தெரியுமா உங்களுக்கு? அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் ஏன்?


கோவிலில் ஏன் குறிப்பாகத் தேங்காய் உடைக்கிறோம் என்றால், தேங்காயில் உள்ள தலைப்பகுதியில் மூன்று கண்கள் இருக்கும். அது மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதை கோவிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பது தான் தேங்காய் உடைப்பதன் பின்னால் இருக்கும் முக்கிய தாத்பர்யம் ஆகும். அதேபோல் அந்த மூன்று கண்களும் லட்சுமி, சிவன், பிரம்மன் ஆகியோரைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொப்பரை தேங்காய்


இறைவனுக்காக உடைக்கும் தேங்காய் முழு கொப்பரையாக இருந்தால், அது உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்வார்கள.

பூ விழுந்த தேங்காய்


கடவுளுக்காக உடைக்கிற தேங்காயில் பூ விழுந்தால் ரோக நாஸ்தி ஏற்படும் என்று சொல்வார்கள். சில சாஸ்திரங்கள் பொன், பொருள் சேர்க்கையான ஸ்வர்ண லாபம் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதனால் சாமிக்கு உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் நீங்கள் சந்தோஷத்தில் கூட துள்ளிக் குதித்து விளையாடலாம்.

அழுகிய தேங்காய்


சாமிக்காக தேங்காய் உடைக்கும் போது அது அழுகியிருந்தால் உடனே மனம் மிகவும் பதட்டப்படும். ஏதோ நடக்கக்கூடுாதது நடக்கப் போகிறதோ என்ற பயமும் ஏற்படுவதுண்டு.
தேங்காய் உடைக்கும் போது ஏற்படுகின்ற அழுகல், மனதில் பெரும் குழப்பத்தை உண்டாக்கும். ஆனால் உண்மை என்ன தெரியுமா?... தேங்காய் உடைக்கும் போது, அழுகியிருந்தால், அது நீங்கள் மகிழ்ச்சியடையத் தான் வேண்டும். ஏனென்றால் உங்களையும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள கண் திருஷ்டி ஆகியவை நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல், தேங்காய் அழுகிய இருப்பது என்பது நீங்கள் எந்த காரியத்தை நினைத்து தேங்காய் உடைத்தீர்களோ அந்த காரியம் சித்தியடையும் என்று பொருள். அடிக்கடி உடல் சரியில்லாமல் போவது, கெட்ட கனவுகள் வருவது, துர் சகுனங்கள் உண்டாவது, கண் திருஷ்டி ஆகியவை நீங்கும். அதனால் இனிமேல் சாமிக்காக உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் சந்தோஷப்படுங்கள். வருத்தப்படாதீர்கள்.

பரிகாரம்



ஒரு வேளை சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்து, உங்களுடைய மனம் ஏதாவது சஞசலப்படுவது போல் தோன்றினால், அதற்கும் எளிய பரகாரம் உண்டு. அது என்னவென்றால், ஏதாவது காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்து அது அழுகினால், அந்த காரியம் நல்லபடியாக நடக்குமுா இல்லையா என்ற கவலை இருக்கும். அதற்கு அன்றைய தினமே 5 அல்லது 7 நபருக்கு அன்னதானம் செய்துவிட்டு, மீண்டும் அதே காரியத்தை நினைத்து மற்றொரு தேங்காயை வாங்கி உடைத்து விடுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக