இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடல்
அலைகளை போல் மற்றவர்களிடம் அன்பு, பாசத்தை அள்ளிக்கொடுக்கும் நேயர்களே...!!
இதுவரை
உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ரண ருண ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இதற்கு மேல்
உங்களின் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு செல்கிறார். சனிபகவான் தான்
இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம்
பார்வையாக ஜென்ம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
புதிய
எண்ணங்களை செயல்படுத்தும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்யவும்.
மனதிற்கு பிடித்த மனைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயாருடன் தேவையற்ற விவாதங்களை
தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம்
சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி
பயிலும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு
படிப்பில் மந்தத்தன்மை உண்டாகும். மாணவர்கள் தங்களது பாடத்தை ஒருமுறைக்கு பலமுறை
படிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
பெண்களுக்கு :
திருமணம்
தள்ளிப்போன பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் திருமண பாக்கியம்
கைகூடும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
ஆடை, ஆபரணச்சேர்க்கையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
இதுவரை
தற்காலிக பணியில் இருந்து வந்தவர்களுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கும். நண்பர்களின்
மூலம் கிடைக்கும் அறிமுகத்தால் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். கவனக்குறைவால்
ஏற்படும் காலவிரயத்தை தவிர்ப்பது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்
சார்ந்த புதிய தொழில் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின்
ஒத்துழைப்பு தங்களுக்கு சிறப்பாக இருக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில்
எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
தங்களது
கலை சார்ந்த முன்னேற்றத்தை நோக்கி வெளியூர் பயணம் செல்வீர்கள். தனவரவுகளில்
இருந்துவந்த தடைகள் அகலும். கலை சார்ந்த புதிய முயற்சிகளை மேற்கொள்ள
வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில்
இதுவரை இருந்துவந்த தேக்கநிலை மாறி தொழில் சுறுசுறுப்புடன் காணப்படும்.
பணியாளர்களின் ஒத்துழைப்பால் இதுவரை இருந்துவந்த பணிச்சுமை நீங்கி வெற்றி
காண்பீர்கள். கலை தொழில் சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள்
உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு
விளைச்சலில் சற்று கவனம் செலுத்த வேண்டும். வரப்பு, நிலம் சார்ந்த தகராறுகள்
ஏற்படும். திராட்சை, அன்னாசி மற்றும் தக்காளி போன்றவை சாகுபடி செய்வதில் கவனம்
வேண்டும்.
வழிபாடு :
அஷ்டமி
தோறும் விரதமிருந்து பைரவர் வழிபாடு மேற்கொள்வது குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான
சூழலை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக