Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 நவம்பர், 2019

விருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023..!!

Image result for விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023..!!




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

விடாமுயற்சியோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே !!

இதுவரை உங்கள் ராசிக்கு தன குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இதற்கு மேல் தங்களின் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான நான்காம் இடத்திற்கு செல்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்ய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்களுக்கு :

தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும்.

மாணவர்களுக்கு :

அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.

வியாபாரிகளுக்கு :

சுயதொழிலில் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொடுக்கும் காலம் இது. அனுபவமிகுந்த வேலையாட்களின் மூலம் லாபம் உண்டாகும். தடைபட்டு வந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த சரக்குகளை விற்று லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்து தங்களை விட வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதத்தின்போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். வெளியூர், வெளிநாடு பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சுயநலம் கருதாது செயல்படுவதன் மூலம் தொண்டர்களின் ஆதரவுகள் மேம்படும்.

விவசாயிகளுக்கு :

நீர்ப்பாசன நிலை நன்றாக இருக்கும். எண்ணெய் வித்துக்கள் சார்ந்த பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய விவசாய மனை வாங்கும் எண்ணங்கள் மேலோங்கும்.

கலைஞர்களுக்கு :

இளைய சகோதரர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேன்மையைத் தரும். கலை சார்ந்து எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் சற்று தாமதத்திற்கு பின்னரே கிடைக்கும்.

வழிபாடு :

சதுர்த்தியன்று விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக