இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மனம்
போல் வாழ விரும்பும் மகர ராசி நேயர்களே...!
இதுவரை
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள்
ராசிக்கு ஜென்மச் சனியாக பெயர்ச்சி அடைகிறார்.
சனி
தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும்
ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும்
பார்க்கின்றார். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வெளிநாட்டு பயணங்கள் சிறப்பாக அமையும். சிறு குறு
தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் சற்று பொறுமை காப்பது அவசியம்.
இளைய
உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.
வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை
தவிர்க்கவும். மனதிற்கு விரும்பிய வாகனங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புதிய
முயற்சிகளில் தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள்
மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
பணி
சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி
உயர்வு சற்று தள்ளி போகும். புதிய அதிகாரியின் அறிமுகம் சாதகமான சூழலை
உருவாக்கும். உத்தியோகம் சார்ந்த ரகசியம் மற்றும் கோப்புகளில் கவனம் வேண்டும்.
மற்றவர்களுக்கான கடன் உதவிகளுக்கு முன்ஜாமீன் இடுவதை தவிர்க்கவும்.
வியாபாரிகளுக்கு :
கூட்டுத்தொழில்
செய்பவர்களுக்கு தங்களது கீழ்நிலை பணியாளர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். தங்களது வியாபாரத்தில் சிறு மாற்றம் செய்து
லாபம் காண்பீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்யும்போது மற்றவர்களின் ஆலோசனை
காட்டிலும் சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும்.
மாணவர்களுக்கு :
விளையாட்டுத்துறையில்
ஈடுபடுபவர்களுக்கு தங்களது கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகப்படுத்தவும்.
படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற தங்களது படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி படிக்க
வேண்டும். பெற்றோர்கள்களின் அரவணைப்பு உங்களின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக
இருக்கும்.
பெண்களுக்கு :
கணவன்,
மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உடனிருப்பவர்களின் உண்மையான முகத்தை தற்போது காண்பீர்கள். திருமண யோகம் அமையும்.
இளைய சகோதரர்களிடையே சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நன்று. பணம் கொடுக்கல்,
வாங்கலில் கவனம் வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம்
மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் பலவிதமான இடர்பாடுகளில் இருந்து
காப்பாற்றும்.
விவசாயிகளுக்கு :
அண்டை
அயலாரிடம் வரப்பு தகராறு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடம் சுமூகமான
போக்கை கடைபிடிப்பதன் மூலம் உறவு நீடிக்கும். புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள்
உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் அலைச்சலுக்கு பின் சாதகமாக அமையும். நீர்
வளங்களுக்கேற்ப பயிர்களை தேர்வு செய்வது நன்மை அளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சியில்
புதிய பொறுப்புகளும் அதன் பொருட்டு பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.
பொதுமக்களிடம் கோபத்தை காட்டாமல் அமைதியுடன் செயல்படவும். மனதில் குழப்பங்கள்
இருந்து கொண்டே இருக்கும். குடும்ப நபர்களுக்கிடையே ஒத்துழைப்பு சிறப்பாக
இருக்கும். கட்சி சார்ந்த உயர் அதிகாரிகளிடையே நெருக்கமான சூழல் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை
சார்ந்த புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். உங்கள் மீதான சில வதந்திகள்
அவ்வப்போது தோன்றி மறையும். வெளியூர் பயணங்கள் நன்மதிப்பை தரும். சம்பளம் தொடர்பான
செயல்பாடுகளில் கண்டிப்பு வேண்டாம். பலவிதமான மக்கள் தொடர்பு ஒரு மாற்றமான சூழலை
உருவாகும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும்
சனீஸ்வரர்க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக