Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

மத்திய அரசு விருது; ரூ.435 கோடி வரிஏய்ப்பு; அலமாரியில் குவிக்கப்பட்ட பணம்!’-யார் இந்த கரூர் சிவசாமி?

 கணக்கில் காட்டாத 32 கோடி


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


இதுவரை 32 கோடி ரூபாய் ரொக்கமும் மொத்தம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பும் செய்திருப்பதற்கான ஆவணங்களும் அதிகாரிகள் கைகளில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுவதால், கரூர் மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கரூரில் இயங்கிவரும் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பிரபல கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் 5-ம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதுவரை 32 கோடி ரூபாய் ரொக்கமும் மொத்தம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பும் செய்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கரூரைச் சேர்ந்தவர் சிவசாமி. தொழில் அதிபரான இவர், கரூர் வெண்ணைமலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் பிரபல கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனத்துக்கு கரூர்-சேலம் பைபாஸ் சாலை சிப்காட் மற்றும் சின்ன தாராபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்தக் கம்பெனியில் தயாரிக்கப்படும் கொசுவலைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐந்துக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை, கோவை மற்றும் இதர மாநிலங்களிலும் உள்ளன. அதோடு, காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் நடத்திவருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு, மத்திய அரசின் `எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ்' விருதையும் பெற்றது.
ஆனால், இந்த நிறுவனம் தொடர்ந்து வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரித்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவது உண்மை எனக் கண்டறியப்பட்டது.
கடந்த 14-ம் தேதி கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தனித்தனியாக பிரிந்துசென்று, ஷோபிகா கொசுவலை குழுமத்துக்குச் சொந்தமான அத்தனை இடங்களிலும் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
 சோதனைக்கு வெளி ஆட்கள் இடைஞ்சல் தந்துவிடக் கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. உள்ளே சென்ற அதிகாரிகள் நிறுவனத்தின் ஆவணங்களை இரவு பகலாக ஆய்வுசெய்தனர்.
மேலும், கரூரில் உள்ள சிவசாமி வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில், துணி அலமாரியில் 2000 மற்றும் 500 பணத்தாள்களை அடுக்கிவைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணம் எண்ணும் இயந்திரம் மூலம் அவற்றை எண்ணியதில், மொத்தம் 32 கோடி ரூபாய் இருந்தது. `அந்தப் பணம் சிவசாமி கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த பணம்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 14-ம் தேதி தொடங்கிய சோதனை, 5-ம் நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை சோதனையிட்டதில், ஷோபிகா கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம் 435 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக