இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டிஜிட்டல்தான்
எல்லாம் என மாறிவரும் இந்த உலகில் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன
செய்யப்போகிறது இந்தியா?
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி
அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இப்படி நாட்டின் பாதுகாப்புக்கு சைபர்
பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, இந்தியாவில் இருக்கும் அனைத்து சைபர்
பாதுகாப்பு பிரச்னைகளைக் கண்காணிக்கவும் தாக்குதல்களைத் தடுக்கவும் முதன்மையான ஒரு
தனி அதிகார மையம் உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,
12-க்கும் மேற்பட்ட சைபர் பாதுகாப்பு நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத்
தெரிகிறது. ஏற்கெனவே இந்த அமைப்புகள் அனைத்தும் இந்தியாவின் சைபர்
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது இந்நிறுவனங்கள்
அனைத்துக்கும் தனித்தனி கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. இவை அனைத்தையும்
ஒருங்கிணைத்து முறையாகச் செயல்படுத்தவே இந்த முயற்சியை அரசு மேற்கொள்ள இருக்கிறது.
தற்போது மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம்,
தேசியப் பாதுகாப்பு செயலகம் (national security council Secretariat), தேசிய
தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (national technical research organization)
மற்றும் இதர பல துறைகளும் நிறுவனங்களும் பிரேத்யக சைபர் அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இந்தியாவில் சைபர் தாக்குதல்களும்
ஊடுருவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் நாட்டின்
பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிகழ வாய்ப்புண்டு.
இவற்றோடு
தனி அமைப்புகளாக கணினி அவரசகால செயல் குழு (computer emergency response team,
CERT), நாட்டின் முக்கிய தகவல்களை நிர்வகிக்கும் கட்டமைப்பு (national critical
information infrastructure ), தேசிய சைபர் ஒருங்கிணைப்பாளர் மையம் (national
cyber coordinator centre) ஆகியவையும் உள்ளன. நாளுக்கு நாள் இப்படியான சைபர்
அமைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
உதாரணத்துக்கு
உள்துறை அமைச்சகம் சமீபத்தில் 'சைகார்டு' என்னும் மையத்தை (cyber cooperation
centre, cycord) உளவுத்துறை தொடங்கியுள்ளது. இது சைபர் உலகில் ஒரு தற்காப்பு
கருவியாகவும் ஹேக்கிங்கிலும் ஆன்லைன் விசாரணைகளிலும் கவனம் செலுத்தும்
அமைப்பாகவும் இருக்கும். ஏற்கெனவே இந்தத் துறையின் கீழ்தான் தேசிய சைபர் க்ரைம்
அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (national cybercrime analytics unit -tau),
கூட்டு சைபர் குழுவிற்கென தனி மேடை, தேசிய சைபர் க்ரைம் தடயவியல் ஆய்வகம்
(national cybercrime forensic laboratory) மற்றும் சைபர் க்ரைம் சுற்றுச்சூழல்
மேலாண்மை பிரிவு ஆகியவை உள்ளன.
வடகொரியா போன்ற நாடுகள் ரகசியமாக
ஹேக்கர் குழுக்களை வளர்த்தெடுத்து வருகின்றன. இதனால் சைபர் பாதுகாப்பில் கவனம்
செலுத்தாவிட்டால் அது பெரும் பின்னடைவாக இருந்துவிடும்.
தேசிய
சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான லியூட்னன்ட் ஜென்ரல் ராஜேஷ் பன்ட்டின்
இப்போதைய முதன்மையான பணியாக இருப்பது, அனைத்து சைபர் பாதுகாப்பு நிறுவனங்களின்
திறன்களை ஒன்றிணைத்துச் செயல்பட வைப்பதே. மேலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள்
தேசியப் பாதுகாப்பு கழக செயலகத்தில் நடைபெற்று வருகின்றன எனவும் உயர்ரக கட்டமைப்பு
ஒன்றை உருவாக்கத் திட்டம் தீட்டப்பட்டது எனவும் சைபர் பாதுகாப்பு வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
கடைசியாக
2013-ல்தான் தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை அறிவிக்கப்பட்டது. தற்போது 2020-ல்
வரவிருக்கும் சைபர் பாதுகாப்புக் கொள்கையில் சைபர் பாதுகாப்பு பற்றிய
விழிப்புணர்வும் அதன் தேவை என்ன என்பதும் வலியுறுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தக் கொள்கை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சைபர்
பாதுகாப்பு குறித்த பாடத்திட்டம் ஒன்றை அரசுக்குப் பரிந்துரை செய்யக்கூடும். இந்த மாற்றங்களுக்கு
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டியதாக இருக்கும்.
இந்திய
சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் இன்னொரு மூத்த அதிகாரி ஊடகம் ஒன்றில் பேசுகையில்,
"இப்படி மறுசீரமைக்கப்படவிருக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டம், மின்னணு
மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இப்போதுள்ள பாராளுமன்ற
அமைப்பில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்கவும் அமல்படுத்தவும் அந்தச் சட்டத்தைச்
செயல்படுத்தும் துறையால் மட்டுமே முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள
வேண்டும்" என்றார்.
ஏற்கெனவே
உலக நாடுகளில் சைபர் கட்டமைப்புகள் ஒருங்கிணைந்த வகையிலே செயல்படுகின்றன.
உதாரணத்துக்கு இங்கிலாந்தில் தகவல் தொடர்பு தலைமையகம்தான் சைபர் பாதுகாப்பு பற்றிய
அனைத்துக்கும் பொறுப்பாக இருக்கிறது. அதேபோல் சைபர் நடவடிக்கைகள் பற்றிய
அறிக்கைகள் அனைத்தையும் நேரடியாக பிரதமரிடமே சமர்ப்பிக்கிறது சிங்கப்பூரின் சைபர்
பாதுகாப்பு நிறுவனம். அமெரிக்காவின் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம்தான்
அந்நாட்டின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தும் அமைப்பாக உள்ளது.
இந்தியாவில்
சைபர் தாக்குதல்களும் ஊடுருவல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதனால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிகழ வாய்ப்புண்டு. சைபர் போருக்குப்
பல நாடுகளும் தயாராக உள்ளன. வடகொரியா போன்ற நாடுகள் ரகசியமாக ஹேக்கர் குழுக்களை
வளர்த்தெடுத்து வருகின்றன. இதனால் சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தாவிட்டால் அது
பெரும் பின்னடைவாக இருந்துவிடும். எனவே, இந்தியா போன்ற வளர்ந்த நாடு சைபர்
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக