Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

மண்புழு உரம் தயாரித்தல்

 Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


உங்கள் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்க வேண்டுமா?

இன்றைய காலகட்டத்தில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான இரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான்.

செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண்புழு உரம். இந்த மண்புழு உரத்தை எளிய முறையில் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இன்று காண்போம்.

தேவையான மூலப்பொருட்கள் :

மாட்டுச் சாணம்

மக்கக்கூடிய இலை தழைகள்

மீன் கழிவுகள்

அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள்

தயாரிக்கும் முறை :

 மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும்.

 ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும்.

இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண்புழு உரம் தயார்.

இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம்.

விற்பனை முறை :

விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண்புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கும் இந்த மண்புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் உள்ளதால் விற்பனைக்கு பஞ்சமில்லை.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக