இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
1. ஆந்தை
மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை
கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல்
எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன்
மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை
மற்றும் கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு
செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம்
ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும்
பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும்.
2. கோட்டான்
மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை
வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு
முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும் மேலும் தாய் பறவைகளும்
எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும் இதனால் உயிரியல் முறைப்படி கோட்டான்கள்
மற்றும் ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை அதிக அளவில்
கட்டுப்படுத்த முடியும்.
3. நம்முடைய
நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற
வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும் உழைக்க வேண்டும்.
4. நிலத்தின்
வரப்பை செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக அமைப்பின் மூலம் எலி
தொல்லையில் இருந்து விடுபட முடியும்.
5. வயல்களில்
இருக்கும் கலைகள் மற்றும் பொருட்களை அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும்
பொழுது அதனை பிடிக்கவும் பிடித்து அழிக்கவும் முடியும்
6. மிகவும்
வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப்
பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும்,
பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை
கட்டுப்படுத்தவும் இஸ்ரேலவிவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள் வளர்ப்பதன்
மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி எலியை கட்டுப்படுத்த முடிகிறது. இதன்
மூலம் எந்த விதமான ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையின் உயிர் சங்கிலியின்
முறையில் ஆந்தைகளைக் கொண்டு எலி தொல்லையை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக