Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

பரிதாப நிலையில் ஓயோ.. 6 மடங்கு நஷ்டம்.. தவிப்பில் ஊழியர்கள்..!


 செலவினங்கள் அதிகரிப்பு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 ஸ்டார்டப் நிறுவனமான ஓயோ ஹோட்டல் அன்ட் ஹோம்ஸ் 6 மடங்கு நஷ்டத்தினை கண்டுள்ளது.இது கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த ஆண்டில் 2,384.69 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது. 

அதிலும் நான்கு மடங்கு வருவாய் கண்ட போதிலும், இப்படி பலவீனமான நஷ்டத்தினை கண்டுள்ளது. ஆறு வயதான ஸ்டார்டப் நிறுவனமான இது. கடந்த நிதியாண்டில் 6,457 கோடி ரூபாய் இயக்க வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,413 கோடி ரூபாயிலிருந்து நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

செலவினங்கள் அதிகரிப்பு

எனினும் மொத்த செலவினம் ஐந்து மடங்காக உயர்ந்து 9,027.53 கோடி ரூபாயை கண்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,835.38 கோடு ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒயோவின் இந்த செலவினங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் செயல்பாட்டு செலவு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்க செலவு மட்டும் 6,131.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இது முந்தைய ஆண்டில் 1,539 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

ஐபிஓ வெளியிட முடியுமா?

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதமே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஐபிஓ வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. ஒரு நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியிலிடுவதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு லாபத்தை காட்ட வேண்டும். ஆனால் ஓயோ தற்போது இப்படி ஒரு நஷ்டத்தினை கண்டிருப்பது இந்த நிறுவனத்திற்கு கவலையை கூட்டியுள்ளது.

காபி டேவை வாங்குகிறதா?

கடந்த சில நாட்களாக காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நிறுவனத்திற்குள்ளும் ஒரு ஒப்பந்தம் போடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஓயோ நிறுவனம், காபி டே நிறுவனத்தை வாங்குவதால் இன்னும் தொழிலில் ஆழமாக செல்ல வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 வணிக மதிப்பு 
இந்த நிலையில் இது வரை பல நாடுகளில் தனது கிளையை மிகப் பரவலாக பரப்பி வரும் நிலையில், இந்தியாவில் இது மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஓயோ வணிகத்தின் மதிப்பு 991 மில்லியன் டாலராக கருதப்படுகிறது. இதே ஜப்பானில் 256.7 மில்லியன் டாலராகவும், இது தவிர சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் 1.21 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக