இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முடிக்கு அழகே கருப்பு நிறம்தான். அத்தகைய
கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது. ஏனெனில் நமது வாழ்க்கைமுறை மற்றும்
பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சத்துக்கள்
கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்?
அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில்
சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால்
உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.
கருமையான கூந்தலை பெறுவதற்கான வழிகள் :
தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால்
பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த
எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசினால்
கூந்தலைப் பெறலாம்.
வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக்
குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கருப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில்
கலந்து தடவி வரவேண்டும்.
கூந்தல் வளர்ச்சிக்காக செம்பருத்தி மலர்கள்,
இலைகள் மற்றும் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கும், பொடுகு பிரச்சனைகளை தீர்க்கவும்
பயன்படுகின்றன. ஷாம்புக்கு பதில் செம்பருத்தி இலைகள் அரைத்துப் போட தலை
குளிர்ச்சியாக இருக்கும்.
நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும்
நன்றாக அரைத்து அந்த விழுதை தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண்
எரிச்சலைப் போக்கும்.
இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக்
குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக கூந்தலின் வேர்க்கால்களில்
படும்படி தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விட்டால் பொடுகுத்தொல்லை இருக்காது.
விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு
எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள்
ஸ்பூன் எடுத்து மிதமாக சுடவைத்து தலைமூடியின் வேர்க்கால்களில் நன்றாகப் படும்படி
தடவி விடவும்.
கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில்
மருதாணிப்பொடி, தேங்காய் பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில்
மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கலாம்.
தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ
மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு
பயன்படுத்தினால் முடி கருப்பாக வளரும்.
தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்
கொள்ளும்போது, சீயக்காய்த்தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து
தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக