இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்துக்கள் கலாச்சாரத்தில் நமஸ்காரம் என்பது மிகவும்
முக்கியமானது. கடவுள் வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும்
நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில்
சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது.
நமஸ்காரம் செய்யும்போது உடலின் அனைத்து பாகங்களும் அதாவது
அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக “தண்டகார
நமஸ்காரம்” மற்றும் “உதண்ட நமஸ்காரம்” என்றும் அறியப்படுகிறது.
இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு
வடிவம் என்று நம்பப்படுகிறது. அடக்கத்தைக் குறிக்கும் சாஷ்டாங்க நமஸ்காரமானது
நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும்.
சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு
தரையில் பட வேண்டும். மேலும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத்
தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள்,
கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த
நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது.
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே புரிய வேண்டும்.
அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. இந்து மத சாஸ்திரங்களின்
படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே
அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை.
பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத
வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய
வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக