Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 நவம்பர், 2019

பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன....?

ovarian cancer 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

புற்றுநோய் என்றாலே உயிரணுகளில் ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோயும் உள்ளடங்கும் இதன் மூலம் உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது.

இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வரமுடியும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய்  அதிக அளவில் தாக்குகிறது.

அறிகுறிகள்:

அசாதரண ரத்தப்போக்கு: கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும் உங்களுக்கு மாதவிடாய்  நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில்  குறிப்பாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்பு நிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை: சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும் எனவும் தெரிகிறது.

பொதுவாக சில பெண்கள் உடலுறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும் கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். எனவே இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டால் மருத்துவரை  அணுகுவது அவசியம்.

இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பழங்கள் சாப்பிடுவது முக்கியம்.

ஆவியில் வேகவத்த உணவுகள் சாப்பிடலாம். அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில் முட்டைக்கோஸ் காலிபிளவர் முளைகட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றிலிருக்கும் இன்டோல் திரீ கார்பினால்  கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம்  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

ஆப்பிள் எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றை எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் பாதாம் பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும்  ஆவியில் வேகவைத்து அல்லது குழம்பு செய்தும் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக