இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக பெண்கள்தான் இயற்கையாகவே அனைவரையும் கவரும் தன்மை
கொண்டவர்களாக இருப்பார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அழகான
ஒரு பெண்ணைக் கண்டால் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானது. ஆனால் இந்த
இரண்டு ஈர்ப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும்.
பெண்கள்தான் மற்றவர்களை கவர்வார்கள் என்னும் நியதியை
பொய்யாக்கும் சில ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் மற்றவர்களை தங்கள்
தோற்றத்தின் மூலம்தான் கவர வேண்டுமென்ற அவசியமில்லை. தங்களின் திறமை, பேச்சு,
பொதுஅறிவு, நகைச்சுவை திறன் சமயோசித புத்தி, நிர்வாகத் திறன் என எதன்மூலம்
வேண்டுமென்றாலும் கவரலாம். ஆண்கள் மற்றவர்களை கவர்பவர்களாக இருப்பார்களா? இல்லையா?
என்பதை அவர்களின் விரல்களை வைத்தே அறிந்துகொள்ளலாம் என்று சாமுத்திரிகா சாஸ்திரம்
கூறுகிறது.
ஆண்களின் விரல்கள்
பெண்களே உங்களின் ஆண் நண்பர்களின் வலது கையையும் அவர்களின்
விரல்களின் நீளத்தையும் கவனியுங்கள். ஏனெனில் ஆண்களின் விரல்கள் அவர்களின் எண்ண
ஓட்டங்களையும், குணங்களையும் பற்றி பலவற்றைக் கூறக்கூடும். குறிப்பாக அவர்களின்
ஆள்காட்டி விரலின் நீளத்தை அதிகமாக கவனிக்க வேண்டும்.
ஆள்காட்டி விரல்
ஆண்களின் வலது கையில் ஆள்காட்டி விரலின் நீளத்தையும், மோதிர
விரலின் நீளத்தையும் கவனியுங்கள். இரண்டும் ஒரே நீளத்தில் இருக்கிறதா? இரண்டில்
எந்த விரல் நீளமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள். ஏனெனில் ஆள்காட்டி விரல்
ஆண்களின் பல ஆளுமைகளை பற்றி வெளிப்படையாகக் கூற இயலும். இந்த ஆளுமைகளில் அவர்களின்
பாலியல் வாழக்கையும் அடங்கும்.
காதல் வாழ்க்கை
ஆண்களின் விரலின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களின் மோதிர
விரலும், ஆள்காட்டி விரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் காதலில்
நேர்மையானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்களை கண்ணை மூடிக்கொண்டு
காதலிக்கலாம். அதேபோல ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருப்பவர்கள்
காதலில் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட
காதலில் ஒரே நேரத்தில் ஈடுபடுவார்கள்.
விரல்களின் ஆய்வு
இந்த ஆய்வு கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில்
நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் படி ஆண்களின் பாலியல் வாழ்க்கைக்கான தொடர்பு
அவர்களின் கருவிலேயே தொடங்குகிறது. ஒரு மனிதனின் உயிரியல் நிகழ்வுக்கும் அவரது
பாலியல் நடத்தைக்கும் உண்மையில் ஒரு தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டியது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்
குழந்தைகள் கருவில் இருக்கும் போது ஆண் மற்றும் பெண்
குழந்தைகள் இருவருக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு ஏற்படும், அதனைப்
பொறுத்துதான் அவர்களின் பாலியல் செயல்பாடு நிர்ணயிக்கப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன்
ஹார்மோன் அதிகமாக இருக்கும் ஆண் குழந்தைகளின் ஆள்காட்டி விரலின் நீளம் அதிகமாக
இருக்கும்.
ஆணுறுப்பின் அளவு
ஆண்களின் ஆள்காட்டி விரல் அவர்களின் ஆணுறுப்பின் அளவை
தோராயமாகக் கூற இயலும். அதன்படி மோதிர விரலை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக
இருக்கும் ஆண்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் நீளமான ஆணுறுப்பைக் கொண்டிருப்பார்கள்
என்று கூறப்படுகிறது. சிறிய ஆள்காட்டி விரல், நீளமான ஆண்குறிக்கும்,
டெஸ்டோஸ்டிரோன் அளவிற்கும் இடையேயான தொடர்பை விளக்குகிறது.
கவர்ச்சியான தோற்றம்
பொதுவாக மோதிர விரலை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக
உள்ள ஆண்கள் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள்
கூறுகிறது. கருவில் இருக்கும் போது அதிகளவு டெஸ்டோஸ்டிரோனை பெற்றதன் அறிகுறி இது.
இவர்கள் பாலியல் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும்
இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக