Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?



Image result for செவ்வாய் பெயர்ச்சி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகத்தில் ஆட்சி பெறுகிறார். மகரத்தில் உச்சமடையும் செவ்வாய் கடகத்தில் நீசமடைகிறார். இந்த கிரகம் இதுநாள் வரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். நவம்பர் 10 முதல் சுக்கிரன் வீடான துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் தேதி வரையில் அதாவது 42 நாட்கள் தொடர்ந்து துலா ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் வரை உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே அதிக நன்மைகளை தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது பலன்களைப் படியுங்கள்
கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும்
கெணிதமுட னாட்சியது வாகும்பாரு
நாளப்பா மகரமது உச்சமாகும்
நலமில்லா நீசமது கடகமாகும்
தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம்
தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம்
பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று
பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே
ராசி மண்டலத்தில் மூன்றாவதாக வீற்றிருக்கும் செவ்வாய் கிரகமானது ஆற்றல், வீரியம், செயல் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவே ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் விதத்தைப் பொருத்து, அவருடைய வாழ்க்கையை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றது செவ்வாய் கிரகம்.
செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில ராசியினருக்கும் குறைந்த பாதிப்புகளையும் சிலருக்கு சற்று அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தவும் கூடும். இந்த இடப்பெயர்ச்சியினால் உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த மாத இறுதி வரையில் இருந்து வந்த மோசமான நிலைமை, அக்டோபர் 28ஆம் தேதி ஏற்பட்ட குருப்பெயர்ச்சிக்கு பிறகு சற்று மாறியுள்ளது. சில நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கும் என்று உறுதியாக நம்பலாம். கடின உழைப்பும், ஸ்திரத்தன்மையும் தான் உங்களின் பலமே. இவற்றை மேலும் மிளிரச்செய்யும் வகையிலேயே இந்த செவ்வாயின் இடப்பெயர்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதோடு கூடுதல் நன்மைகளையும் அள்ளித்தரும் என்பது நிச்சயம். பணியிடத்தில் உங்களின் சகிப்புத் தன்மையும், கடின உழைப்பும் உங்களுக்கு வெகுமதியை வாரி வழங்கப்போவது நிச்சயம். நேர்மையான வழியில் வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் உங்களுக்கு இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், சில நாட்கள் வீட்டை விட்டு பிரிய நேரிடலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் படிப்படியாக குறையும். உடல் நிலையில் சிறிய அளவுல் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கூடும்.
சிம்மம்
சிங்கத்தைப் போல் வேகமாக செயல்படும் சிம்ம ராசியினருக்கு இந்த செவ்வாயின் இடமாற்றம் புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த உற்சாகம், உங்களின் செயலில் சோம்பலை நீக்குவதோடு புதிய உத்வேகத்தை அளிக்கும். இது உங்களின் எதிர்கால இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேற உதவும். எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுபடுவீர்கள். நிலம் சொத்து தொடர்பான பிரச்சனையில் உங்களுக்கு சாதகமான போக்கு நிலவுகிறது. போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி காண உதவும். உங்களின் சிந்தனையையும், ஆற்றலையும் உரிய முறையில் பயன்படுத்தினால் நல்ல விளைவுகளை மாற்றங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த மாற்றம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றம் காண உதவும். இந்த செவ்வாயின் பெயர்ச்சியானது அனைத்து வகையிலும் உங்களுக்கு நல்ல விதமான பலன்களையே அளிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சற்று நிம்மதியைக் கொடுக்கும் என்பது உறுதி. உடல் நலனைப் பொருத்த வரையில், இது வரையிலும் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த தலைவலி, காய்ச்சல் உடல் வலி போன்றவற்றோடு, எல்லா துன்பங்களும் பறந்தோடி விடும். அதோடு, செவ்வாயின் பெயர்ச்சியானது, உங்களின் வாழ்க்கையில் நல்லதொரு அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொண்டுவரும் என்பது நிச்சயம். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அவை அனைத்துமே செவ்வாயின் இடப்பெயர்ச்சியாலும் உங்களுடைய நட்சத்திர அமைப்பின் படியும் தான் ஏற்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும் செவ்வாயின் இடமாற்றம் உங்களின் உடல் நலத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். கடந்த காலங்களில் இருந்து வந்த உடல் உபாதைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். இது வரையிலும் இருந்து வந்த தூக்கமின்மை, அமைதியின்மை, பதட்டம் போன்றவை காணாமல் போய் நிம்மதியான உறக்கமும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த செவ்வாயின் இடப்பெயர்ச்சியானது குறிக்கோளையும், லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாக விளங்கும். உங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு இதுவரையிலும் நீங்கள் சிரமப்பட்டு வந்திருந்தால், இந்த ராசி மாற்றம் உங்களுக்கு நிச்சயமாக தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் சமூக பொறுப்புகளில் அதிக அக்கறையுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். உங்களின் உற்சாகம் மேலும் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடர்ந்து உதவுகிறது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எட்டிப்பார்க்கக்கூடும். வாகன பயணத்தில் சின்ன சின்ன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் வாகனத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நன்மை விளைவிக்கும். உறவினர்களின் மத்தியில் அவப்பெயர் ஏற்பட நேரிடலாம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். மூதாதையர் சொத்துப் பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டு உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்துமே செவ்வாயின் இடமாற்றத்தினால் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக