Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 நவம்பர், 2019

மும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு?

 Image result for மும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஆசியாவின் தொன்மையான பங்குச் சந்தை சீனாவிலோ, ஜப்பானிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. இந்தியாவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
மும்பையில் இருக்கும் அந்த சந்தையின் ஆரம்ப கால பெயர், `தி` நேட்டிவ் ஷேர் & ஸ்டாக் புரோக்கர்ஸ் அசோசியேஷன்’ (The Native Share & Stock Brokers Association). அது ஆரம்பிக்கப்பட்டது, ஜூலை மாதம் 1875-ம் ஆண்டு.
அதன் தற்போதைய பெயர், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். சுருக்கமாக BSE. தமிழில் `மும்பை பங்குச் சந்தை' என்றும் குறிப்பிடுகிறார்கள். தொன்மையான சந்தையில் இன்றைக்கும் சிறப்பாக வர்த்தகம் நடந்துகொண்டிருக்கிறது. சந்தையின் கட்டடம் இருப்பது, `தலால் ஸ்டிரீட்’ என்கிற சாலையில். அதனால் அந்தத் தெருவின் பெயரே பங்குச் சந்தைக்கு அடையாளமாகிவிட்டது. பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுகிறபோது சில சமயம் `தலால் ஸ்ட்ரீட்’ ல் உயர்வு அல்லது வீழ்ச்சி என்பது போல குறிப்பிடுகிறார்கள். அயல்நாடுகளிலும் இந்தப் பெயர் பிரபலம்.
From starting under a banyan tree to becoming the fastest exchange in the world, BSE has crossed many milestones in its 143 year journey.
எந்தப் பங்குச் சந்தையும் அரசாங்கத்தினுடையது அல்ல. பெரும்பாலும் பங்குச் சந்தை புரோக்கர்கள்தான் சந்தையை ஆரம்பிப்பார்கள், நடத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச் சந்தை பப்ளிக் லிமிடெட் நிறுவனம் ஆகிவிட்டது. அதன்பின், மற்ற நிறுவனப் பங்குகளைப் போல, BSE என்ற 2 ரூபாய் முகமதிப்புள்ள பங்கின் நேற்றைய (6.11.19) விலை, 536.95 ரூபாய். அந்தப் பங்கை எவரும் சந்தையில் வாங்கலாம், விற்கலாம். ஆனால், மும்பை பங்குச் சந்தையில் அல்ல. காரணம் அது பங்குச்சந்தையின் பங்காக இருப்பதால், வேறு ஒரு பங்குச்சந்தையான தேசிய பங்குச் சந்தையில் மட்டும்தான் பட்டியல் இடப்பட்டிருக்கிறது.
சென்செக்ஸ் என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது பங்குகளின் விலை மாற்றத்தைக் காட்டுவது. அது தொடங்கப்பட்ட ஆண்டு, 1986. ஜனவரி மாதம் 2-ம் தேதி.
1978-79ம் ஆண்டை `பேஸ் இயர்’ ஆக எடுத்துக்கொண்டு, 100 என்ற புள்ளிகளுடன் தன் பயணத்தைத் தொடங்கிய சென்செக்ஸ், தற்போது அடைந்திருப்பது 40,000 என்ற மைல் கல்லை.
முப்பத்து மூன்று ஆண்டுகளில் 400 மடங்கு உயர்வு. 1986-ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது நான்கு கோடி ரூபாய் போல.
உலகில் இயங்கும் பல்வேறு பங்குச் சந்தைகளில், நாளொன்றில் நடக்கும் `டிரேட்’களில், மிக அதிகமான டிரேட்கள் நடப்பதில் இரண்டாவது இடம், இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தைக்குத்தான். இதை `நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்’ என்பார்கள் (NSE). 5.11.19 அன்று NSE-ல் மட்டும் ஒருநாள் நடந்த டிரேட்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 36 லட்சத்துக்கும் சற்று கூடுதல். டிரேட் ஆனவற்றின் சந்தை மதிப்பு 40,000 கோடி ரூபாய். ஒரே ஒரு நாளில்.
NSE ஆரம்பிக்கப்பட்டது 1994-ம் ஆண்டு. கட்டடங்களில் நடந்துகொண்டிருந்த பங்கு வர்த்தகத்தை, அவரவர் இடத்தில் இருந்தே கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மூலம் செய்யவல்ல screen-based trading-ஐ அறிமுகப்படுத்தியது NSE தான்.
தேசிய பங்குச் சந்தை
Life Insurance Corporation of India, State Bank of India, IFCI Limited, IDFC Limited and Stock Holding Corporation of India Limited போன்ற உள்நாட்டு நிறுவனங்களும், Gagil FDI Limited, GS Strategic Investments Limited, SAIF II SE Investments Mauritius Limited, Aranda Investments (Mauritius) Pte Limited and PI Opportunities Fund போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் சேர்ந்து முதல் போட்டு தேசிய பங்குச் சந்தையை ஆரம்பித்தார்கள்.
பங்குகள் என்றால் பட்டியல் இடப்பட்டவைதான். பட்டியல் இடப்படுவதை `லிஸ்டிங்’ செய்யப்பட்டது என்பார்கள். அவற்றைத்தான் இந்த இரண்டு சந்தைகளில் வாங்க முடியும். விற்கமுடியும்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 5,000. NSE யில் பட்டியல் இடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் 2000.
சில நிறுவனங்களின் பங்குகள் NSE-ல் மட்டும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வேறு சில BSE-ல் மட்டும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 1,600 பங்குகள் மட்டும் இரண்டு சந்தைகளிலும் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையின் இடைத் தரகர்களை `ஸ்டாக் புரோக்கர்’ என்று அழைக்கிறார்கள். NSE-ல் அவர்களை `டிரேடிங் மெம்பர்கள்’ என்று அழைக்கிறார்கள். தரகர் ஆக அதிக அளவில் முன்பணம் கட்டவேண்டும். கட்டும் பணத்திற்கு வட்டி கிடையாது.
ஒரு தரகு நிறுவனமே இரண்டு சந்தைகளிலும் தரகராக இருப்பார்கள். சில பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியல் இடப்பட்டிருக்கும். அவற்றை வாங்குவதென்றால், அதில் ஸ்டாக் புரோக்கராக இருக்கும் நிறுவனம் மூலம்தான் வாங்க முடியும். அதே போல NSE-ல் பட்டியல் இடப்பட்டிருக்கும் பங்குகளை NSE-ல் டிரேடிங் மெம்பராக இருக்கும் தரகர் மூலம்தான் வாங்க முடியும்.
எந்த முதலீட்டாளராலும் பங்குச்சந்தைகளிலிருந்து தரகர் இல்லாமல் நேரடியாக வாங்க முடியாது. ஆகவே, எவரேனும் பங்கு வாங்கித்தருகிறார்கள் என்றால், அவர்கள் கொடுக்கும் `கான்ட்ராக்ட் நோட்’ டில், தரகர் பதிவு எண் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.
வாங்கிய பங்குகள், வாங்கியவரின் டிமேட் கணக்கிற்கு வந்தபின் அவர் இந்த இரண்டு சந்தைகளில் எதில் வேண்டுமானாலும் அவரது தரகரை விற்கச் சொல்லிக் கேட்கலாம். ஆனால், வாங்கியதை டெலிவரி எடுக்காமல் அன்றைய தினமே விற்பதென்றால், வாங்கிய சந்தையில்தான் விற்கமுடியும். BSE என்றால் BSE-யில். வாங்கியது NSE -ல் என்றால் NSE-யில்.
ஒரு தரகரே இரண்டு சந்தைகளிலும் புரோக்கராக இருந்தால், அவர் இரண்டிலும் டிரேட் செய்வது, வாங்கி விற்பது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. எல்லாம் ஒரே கம்ப்யூட்டரில் வெவ்வேறு ஸ்கிரீன்களில் தெரியும். அவ்வளவுதான்.
அப்படி கம்ப்யூட்டர்களில் வாங்கும், விற்கும் ஆர்டர் போடுகிறவர்கள் குறிப்பிட்ட `கோர்ஸ்’ பாஸ் செய்திருக்கவேண்டும். `கேஷ்'க்கு தனியாக, எப் & ஓ வர்த்தகங்களுக்குத் தனியாக. அவர்கள் பெயர், டீலர்.
இரண்டு சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டிருக்கும் சில பங்குகள், ஒரே நேரம் இரண்டு சந்தைகளிலும் சிறிய விலை வித்தியாசங்களுடன் டிரேட் ஆவது உண்டு. இரண்டிலும் தரகராக இருக்கும் புரோக்கர்களால் இந்த விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி சிறு லாபம் பார்க்க முடியும். இதை `ஆர்பிட்ரேஜ்’ என்பார்கள்.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணுக்குப் பெயர், நிஃப்டி. இது குறிப்பிட்ட 50 பங்குகளின் விலை மாற்றங்களை மட்டும் காட்டுவது. நவம்பர் 3, 1995-ல் நிஃப்டி 1000 புள்ளிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது நெருங்கியிருக்கும் மைல் கல், 12,000 புள்ளிகள்.
உலகிலேயே மிக அதிகம் வர்த்தகமாகும் குறியீட்டு எண், நமது நிஃப்டிதான் என்பது கூடுதல் தகவல். நிஃப்டியை சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் வாங்கலாம், விற்கலாம். அதன் பெயர், SGX Nifty.
- முதல் போடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக