இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராமானுஜர்
வழிபட்ட இந்த அமிர்த நாராயண பெருமாள் திருக்கோவிலானது நாகப்பட்டினத்தில் உள்ள
திருக்கடையூரில் அமைந்துள்ளது.
மூலவர்
- அமிர்த நாராயணப் பெருமாள்
அம்மன்
- அமிர்தவல்லி
பழமை
- 500 ஆண்டுகளுக்கு முன்
ஊர்
- திருக்கடையூர்
மாவட்டம்
- நாகப்பட்டினம்
தல வரலாறு :
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து
அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார்.
மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின்
அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார்.
தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை
கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி
என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை
தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார்.
இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம்
தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். அவனை வெட்டினார்
விஷ்ணு. அமிர்தம் பருகியதால் அவனுக்கு உயிர் போகவில்லை. துண்டான உடல்கள் ராகு,
கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தனர்.
அபிராமி அம்மையின் தோற்றத்திற்கும்,
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான விஷ்ணு திருக்கடையூரில் அமிர்த நாராயண
பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவியும் உள்ளனர்.
அமிர்தவல்லித் தாயாரிடம் திருமணமாகாத பெண்கள் வேண்டிக்கொண்டால் சிறந்த மணமகன்
அமைவார்.
தலச் சிறப்பு :
அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு,
அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன்
முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. ராகு - கேது பரிகார தலமாகவும்
கருதப்படுகிறது.
பிராத்தனை :
குழந்தை புத்திக்கூர்மை, வலிமை, பயமின்மை,
சாதுர்யம், நற்பண்பு, வியாபாரம் செழிக்கவும் இங்கு உள்ள பெருமாளையும், தாயாரையும்
வழிபடலாம்.
இங்கு
நேர்த்திக் கடனாக பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து நெய்விளக்கு
ஏற்றி வழிபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக