இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிளவக்கல்
அணை விருதுநகர் மாவட்டத்திலிருந்து 59.4கி.மீ தொலைவிலும்,
திருவில்லிபுத்தூரிலிருந்து 32.4கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது தான் பிளவக்கல் அணை.
சிறப்புகள் :
மாவட்டத்தின் முக்கிய அணையாகவும், சுற்றுலா
தலமாகவும் விளங்குகிறது பிளவக்கல் பெரியார் அணை.
சிவகாசிக்கு மிக அருகில் இருக்கும் மிக முக்கிய
சுற்றுலாத் தலம் பிளவக்கல் அணையாகும். இந்த அணை மதுரையிலிருந்து 90கி.மீ
தொலைவிலும், விருதுநகரிலிருந்து 59கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அழகான தோட்டங்கள்
உள்ளன. மேலும், படகு சவாரியும் உள்ளது.
இந்த
அணையில் ஒரு சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா இருப்பதால், இந்த பூங்காவில் சிறுவர்கள்
ஆசை தீர விளையாடி மகிழலாம். இந்த பிளவக்கல் அணை கோவிலார் அணை மற்றும் பெரியார் அணை
என்ற இரண்டு பிரிவுகளை கொண்டது.
பிளவக்கல் அணையிலிருந்து வினாடிக்கு 3 கன அடி
வீதம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் பயனாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள
கான்சாபுரம், கொடிக்குளம் பகுதிகளில் உள்ள பூரிப்பாறைக்குளம், சீவனேரி கண்மாய்,
குணவந்தனேரி கண்மாய், கொடிக்குளம், பெத்தான்குளம், புங்கன்குளம், வத்திராயிருப்பு
பெரியகுளம், விராகசமுத்திரம் கண்மாய் ஆகிய 8 கண்மாய்கள் மூலம் 1167.85 ஹெக்டேர்
நிலங்கள் மற்றும் நேரடி கால்வாய் பாசனம் மூலம் 174.69 ஹெக்டேர் நிலங்களும்
ஆகமொத்தம் 1342.54 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கோவிலார் அணை 133 அடி நீர்த்தேக்க கொள்ளளவையும்,
பெரியார் அணை 193 அடி நீர்த்தேக்க கொள்ளளவையும் கொண்டிருக்கின்றன. அக்டோபர் முதல்
டிசம்பர் வரையுள்ள மாதங்களில் இந்த அணைகள் முழுவதுமாக நிரம்பியிருக்கும்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
செண்பகத் தோப்பு
அய்யனார் அருவி
குகன்பாறை
எப்படி செல்லலாம்?
திருவில்லிபுத்தூரிலிருந்து
பிளவக்கல் அணை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக