இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
கிராமத்தில் ராமு என்ற ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம்
இருந்தது. ஆனால், அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்கு
செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.
ஒருநாள்
மாலை நேரத்தில் அவன் கிராமத்தை சுற்றி வந்த போது, ஒரு சிறிய அழகான பறவையைப்
பார்த்தான். தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று, அதனுடன் விளையாடிப் பொழுதைக்
கழிக்கலாம் என்று நினைத்து பறவையை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பறவைக்கு உணவை
அளித்து, அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில்
இருட்டிவிட்டது. வழக்கம் போல் தூங்கி விட்டான்.
பொழுது
விடிந்து கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார்
மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது. நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன் என்று
யோசித்தான். நீ எடுத்து வந்த பறவைதான் நான் இப்போது வளர்ந்துவிட்டேன். எனக்குப்
பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப்
போட்டான். பறவை அதை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.
ராமு
தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும்
இல்லாததால் வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுவதும் வெளியில் இருந்து விட்டு
இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது!
ராமுவுக்கு
பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். பொழுதும்
விடிந்தது! ராமு பசியுடன் இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையை சுமந்து கொண்டு
வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பி மூட்டையை
சற்று இறக்குவதற்கு உதவினால், நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.
அதற்கு
ராமு எனக்கு உணவு கிடைக்குமா? என்று கேட்டான். வாங்கித் தருகிறேன் என்றார்
பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது.
சாப்பிட்டப்பின் வீட்டுக்குச் சென்றான். ஆனால், பறவையை எப்படியாவது வீட்டை விட்டு
துரத்திவிட வேண்டும் என்று நினைத்தான்.
வீட்டிற்குச்
சென்றதும் பறவை சற்று சிறியதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன்
சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.
மறுநாள்
கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறு நிறைய சாப்பிட்டான். பறவைக்கும்
உணவு வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. இனி உழைத்து உண்ண வேண்டும்
என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.
பறவை
முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான். இது எப்படி? என்று
பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த
வேலை முடிந்தது என்றது பறவை.
எனக்கு
மிகவும் மகிழ்ச்சி இந்த உணவை சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு
நன்றி. எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என்
உணவை நான் தேடிக்கொள்வேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.
அது
வானில் ஒரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை
வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத்
துடைத்துக்கொண்டான்.
நீதி :
உழைத்து
சாப்பிட்டால் தான் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக