Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

நால்வகை அமானுஷ்யங்களும் அணையா தீபமும்! யாழில் பிரமிப்பூட்டும் ஆலயம்!

Image result for நால்வகை அமானுஷ்யங்களும் அணையா தீபமும்! யாழில் பிரமிப்பூட்டும் ஆலயம்!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் மிகவும் எழில் பொங்கும் புங்குடுதீவு மிகப் பழமையானதும் அற்புதங்களும் அதிசயங்களும் கொண்டமைந்தது.
இது அனைவரும் அதிசயிக்கத்தக்க முன்மாதிரியாளன மக்கள் தொண்டன் அறங்காவலர் கந்தையா திருநாவுக்கரசு வாழ்ந்த பூமியாகும்.
இந்த தீவு ஓர் அதிசய தீவு என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?
சிவயோக சுவாமிகளது திருவடிகளிலே அவருடைய நயன பரிச வாசக தீட்சைகளை நேரடியாகப் பெற்றவர்தான் கந்தையா திருநாவுக்கரசு.
பூங்குடுதீவு 3 ஆம் வட்டாரம் பெரிய காட்டுப் பகுதியில் வட இலங்கை சர்வோதயத்திற்கு வாங்கப்பட்ட நிலப்பகுதியாக அமைந்துள்ள வீட்டில் சிவயோக சுவாமிகளின் சீடன் திருநாவுக்கரசு 11.11.1978 ஆம் ஆண்டு நாட்டில் அமைதி சமாதானம் சுபீட்சம் நிலவ வேண்டும் என வேண்டி அந்த வீட்டின் அறையில் மகா தீபம் ஒன்றை ஏற்றினார். இந்தத் தீபம் 42 வருடங்களாக அணையாது ஓளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது யாரும் அறிந்திராத ஓர் அதிசயமாகும்.
நாட்டில் ஏற்பட்ட போரச்சூழல் அதனால் விளைந்த இடப்பெயர்வுகளின் போதும் இந்த விளக்கு அணையாது தொடர்ந்து எரிந்த அற்புதம் தான் என்ன?
மனிதர்களில் பல லட்சம் பேரில் ஒரு சிலர் மாத்திரமே தீர்க்க தரிசிகளாக இருப்பார்கள் அதில் ஒருவர் தான் திருநாவுக்கரசும் எதிர்காலத்தில் 25 வருடங்களில் எவை எவையெல்லாம் நடைபெறப் போகின்றதோ அவற்றை எழுதிவைத்தவர். அதன்படி இன்று அனைத்தும் நடக்கின்றது.
இறப்பதற்கு முதல் நாள் இரவு எழுதிய ஒரு கடிதம் ஒன்றில் அவர் மறுநாள் இறப்பார் என்ற செய்தி உண்டென்பதும் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
திருநாவுக்கரசு இறந்த பின்னும் அவரின் அனைத்து உடைமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை இங்கு முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
இவற்றை விட இன்னும் இரண்டு அதிசயங்கள் உண்டு. இந்த காணியில் அமைந்துள்ள சிவயோக சுவாமிகளின் நினைவாலயத்தில் அவரின் அஸ்தி வைத்து வழிபாடியற்றப்படுகிறது. இங்கு காணப்படும் விளக்கும் தொடர்ந்து 38 வருடங்கள் ஒளிர்த்துகொண்டிருக்கின்றது.
இதேபோன்று இங்கு ஓர் சிவலிங்க மடாலயம் ஒன்று உண்டு. இங்கு காணப்படும் சிவலிங்கம் மிகப் புராதனமானது. இங்கு ஒளிரும் விளக்கும் தொடர்ந்து 38 வருடங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.
நால்வகை அதிசயங்கள் அமானுஷங்களைக் கொண்ட திருநாவுக்கரசு அறங்காவல் வளாகம் மனித அமைதியால் தெய்வீகத்தில் இறையுணர்வை உணரும் உன்னத இடமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக