இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேனியிலிருந்து ஏறத்தாழ 31.7கி.மீ தொலைவிலும், போடியில் இருந்து 16கி.மீ தொலைவிலும், மேற்குத் தொடர்ச்சி மலைவாசத் தலங்களில், அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலமாக குரங்கணி அமைந்துள்ளது.சிறப்புகள் :
இது தென்னிந்தியாவிலேயே உயரமான மலைப்பகுதி ஆகும். இந்த மலையில் முதுவான் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
குரங்கணி மலைப்பாதை மூலிகை காற்றையும், முகத்தில் முத்தமிட்ட ஜில்லென்ற குளிர்காற்றின் புதிய பரவசத்தையும் அள்ளித்தரும்.
அகலமான அழகிய மலைச்சாலையில் ஒரு பக்கம் மலைகளும், இன்னொரு பக்கம் மலைப் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள தென்னை, மா, மசாலாப் பொருட்கள், காப்பி போன்றவற்றின் இயற்கை அழகுகளையும் கண்டுகளிக்கலாம்.
சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் உருவாக்கப்பட்ட வாணிப்பாதை இப்பகுதியில் உள்ளது.
குரங்கணி மலையானது அடிக்கடி மாறும் காலநிலையும், தவழும் மேகங்களையும், குளிர்ந்த காலநிலையும், வலுவான காற்றையும் உடையதாக இருக்கும். மேலும், இங்கு இந்திய கடமா, குரைக்கும் மான், லங்கூர்கள், இந்தியப் பாலைவனப் பூனை ஆகியவை உள்ளன.
இங்கு உள்ள மலைகள் மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு ஏற்றது. கேரளாவில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து, அடர்ந்த வனப்பகுதிகளையும், புல்வெளிகளையும் கடந்து நடந்தே செல்ல முடியும்.
குரங்கணியில் ஆறு, அருவி என ரசித்து விட்டு அப்படியே முதுவாக்குடி, கீழ்முட்டம், மேல்முட்டம், புல்மேட்டுச்சேரி, சென்ட்ரல் என மலை கிராமங்களுக்குப் பயணிக்கும் போதும், மூலிகைக் காற்று வீசும் போதும் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இங்கு ஆரோக்கிய பயணமாய் சென்று வர குதிரைகள் இருக்கின்றன. இந்த மலையில் பாயும் ஓடையின் கிழக்கே குரங்கணி மலைகளும், மேற்கில் கொளுக்குமலைகளும் அமைந்துள்ளன.
எப்படி செல்வது?
போடியிலிருந்து குரங்கணிக்கு பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
தேனி மற்றும் குரங்கணியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
மேகமலை அருவி.
சுருளி அருவி.
கும்பக்கரை அருவி.
போடி மெட்டு.
ஸ்ரீ பென்னிகுவிக் மண்டபம்.
வைகை அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக