Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 நவம்பர், 2019

டிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்! எப்போது முதல்?

புதிய டி.டி.எச் ஆபரேட்டர் மாற்றுவதில் உள்ள சிக்கல்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம், இதற்கான புதிய வழியை டிராய் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதென்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய டி.டி.எச் ஆபரேட்டர் மாற்றுவதில் உள்ள சிக்கல்

புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல், உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம் என்று கூறினால், பலருக்கும் சந்தோஷமாகத் தான் இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஆபரேட்டரை மாற்றம் செய்யும் பொழுது பயனர்கள் ஒவ்வொரு முறையும் அந்நிறுவனத்தின் புதிய செட்-டாப் பாக்ஸை வாங்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும் என்பதானாலே பலரும் இன்னும் ஆபரேட்டரை மாற்றம் செய்யாமல் இருக்கின்றனர்.

செல்போன் சேவை போல டிடிஎச் சேவை இல்லாதது என்?

செல்போன் பயனர்கள், உங்கள் சேவை நெட்வொர்க்கை மாற்ற விரும்பினால், நீங்கள் கடைக்குச் சென்று அந்த ஆபரேட்டரின் சிம் கார்டை வாங்கினால் போதும். புதிய ஆபரேட்டருக்கு மாற ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய போனை வாங்க வேண்டியதில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் டிடிஎச் சேவைக்கு அப்படி இல்லை.

டிராய் இன் புதிய முயற்சி

முக்கிய தொழில்நுட்பம் செல்போன்களுடன் மிகவும் ஒற்றுமையாக இருந்தாலும், டி.டி.எச் துறையில், இது இப்படிச் செயல்படுவதில்லை. டிடிஎச் ஆபரேட்டரை மாற்றம் செய்யும் பயனர்கள் கண்டிப்பாக புதிய இணைப்புடன் புதிய செட்-டாப் பாக்ஸை வாங்க வேண்டியது கட்டாயம். இதை விரைவில் டிராய் தனது புதிய செட்-டாப் பாக்ஸ் மூலம் மாற்றப்போகிறது என்று அறிவித்துள்ளது.
 

இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்

 இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்(Interoperable Set-Top Box) என்ற புதிய வகை செட்-டாப் பாக்ஸை டிராய் சோதனை செய்து வருகிறது. இதன்படி பயனர்கள் தங்கள் டிவியில் தங்களுக்கு விருப்பமான ஆபரேட்டரை மட்டும் தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம், இனி செட்-டாப் பாக்ஸ் மாற்ற வேண்டியதில்லை. இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்களுக்கான முதல் கட்ட சோதனையை டிராய் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

அதிகப்படியான கட்டணம் சேமிக்கப்படும்

அடுத்த ஆண்டு இந்த புதிய வகை இண்டர்ஆப்பரபில் செட்-டாப் பாக்ஸ்களை டிராய் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செட்-டாப் பாக்ஸ்களால் உடனடி நன்மையாக வாடிக்கையாளர்களுக்கு புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்கும் கட்டணம் சேமிக்கப்படும், அதேபோல் புதிய சேவைக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தையும் சேமிக்க முடியும் என்று டிராய் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக