இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சூழலியலை
அடிப்படைக் கல்வியாக மாற்றிய முதல் தேசமாக இத்தாலியின் பெயர் இடம்பெறவிருக்கிறது.
`அடுத்த
கல்வியாண்டு தொடங்கி, தங்களது நாட்டின் ஒவ்வொரு வகுப்பறையும் காலநிலை மாற்றம்
குறித்துக் கற்றுக்கொடுக்கும்' என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான
அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டுக் கல்வித்துறை அமைச்சர் லோரென்ஸோ
ஃபியரோமோன்டி வெளியிட்டுள்ளார்.
இதன்படி,
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த அறிவூட்டல்கள் தற்போதைய
கல்விமுறையோடு இணைக்கப்படும். அது செப்டம்பர் 2020 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இத்தாலி |
``வருடத்துக்கு
33 மணி நேரம்வீதம் இனி, இத்தாலியின் ஒவ்வொரு வகுப்பறையும் காலநிலைமாற்றம் தொடர்பாக
மாணவர்களுடன் விவாதம் மற்றும் உரையாடல்களை எடுத்துச் செல்லும். இதன்வழியாக
எதிர்காலக் குடிமக்களான மாணவர்களை காலநிலை மாற்றம் தொடர்பான அவசரநிலைக்குத்
தயார்படுத்துவதே இந்தக் கல்வியின் நோக்கம்.
அதுமட்டுமல்லாமல் இயற்பியல்,
கணிதம், புவியியல் உள்ளிட்ட அடிப்படைக் கல்விகளோடும் சூழலியலைத் தொடர்புபடுத்திய
பாடங்கள் இணைக்கப்படும். இதன்வழியாகச் சூழலியலை அடிப்படைக் கல்வியாக
மாற்றிய முதல் தேசமாக இத்தாலி இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் காலநிலை
மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பான கல்வியில் இத்தாலி முன்னோடியாகத்
திகழும்" என்று லோரென்ஸோ தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
லோரென்ஸோ ஃபியரோமோன்டி |
2017-ம்
ஆண்டு சூழலியல் மேம்பாட்டுக்கான ஐக்கியநாடுகளுக்கான நிதிக்காக இத்தாலி 5 மில்லியன்
யூரோக்களைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக