இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் - 1/2
கப்
ஆப்ப சோடா - 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப் (பொடி)
கலர் - தேவையான கலர்
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில்
மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து சலித்து
கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்க்கவும். பின் பாலை
அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு
கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் குக்கரில் கால்
பாகம் அளவுக்கு ஆத்து மணலை கொட்டி அடுப்பில் வைக்கவும். கேக் செய்யும்
பாத்திரத்தில் அதாவது கணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும், இதனால்
கேக் ஒட்டாமல் வரும்.
கேக் கலவையை அந்த
பாத்திரத்தில் ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற
வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும். இப்போது குக்கரில் இந்த
கேக் பாத்திரத்தையும் வைத்து மூடவும். விசில் போடக் கூடாது. குக்கர் மூடியில் உள்ள
கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். 30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும். 10
நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
கேக்கின் அளவை பொறுத்து கேக்
வேகும் நேரம் சற்று மாறுபடும். ஆகையால் 25 நிமிடம் கழித்தவுடன், குக்கரை திறந்து
வெந்துள்ளதா என்று பார்க்க, ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல்
வந்தால் கேக் வெந்து விட்டது அடுப்பை அனைத்து விடலாம் இல்லா விட்டால்
இன்னும் சிறிது நேரம் வைக்கவும். குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்கும்முன்,
மணலைச் சூடு செய்ய வேண்டாம். மணலுக்கு பதிலாக கல் உப்பையும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக