இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அம்மான் பச்சரிசி
பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான்
நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும்
ஆயுர்வேத மருத்துவத்தில் இவை பயன்படுத்தப்படுகிறது.
அம்மான் பச்சரிசி இலைகளை
நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு
வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
சில
தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இவர்கள்
தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம்
செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி
வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
அம்மான்
பச்சரிசி இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக
செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.
உடலில்
கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று
போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.
பெண்களுக்கு
ஏற்படும் வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து
காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால்
வெள்ளைப்படுதல் குணமாகும் .
அம்மான்
பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
அம்மான்
பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு
இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து
சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக