Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

இந்தாங்க இதெல்லாம் மன்னர் கால தங்கப் புதையல் - சிக்கும் அப்பாவி பெண்கள்!

 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

புதையல் மூலம் தனக்கு பழங்கால தங்கக் கட்டிகள் கிடைத்ததாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஏராளமான பெண்களை குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளார்.

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மனைவி கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் துணி எடுக்க வருகை புரிந்துள்ளனர்.

அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரும் வந்துள்ளார். தான் சாலை பணியாளர் என்றும், காரமடை ரங்கா நகர் பகுதியில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடை உரிமையாளர் கவிதா மற்றும் லட்சுமி ஆகியோருக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள லட்சுமி முடிவு செய்தார். தன்னிடம் தங்கக் கட்டிகள் இருக்கிறது என்றும், சாலைப் பணிக்கு குழி வெட்டிய போது கிடைத்ததாகவும் லட்சுமி கூறியுள்ளார். இதைக் கேட்ட கவிதாவிற்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது.

இந்த தங்கக் கட்டிகளை ஆண்களிடம் கொடுத்தால் ஏமாற்றிவிடுவார்கள். அதனால் விற்காமல் பத்திரமாக வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். பின்னர் நீங்கள் ஏன் இந்த தங்க கட்டிகளை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று கேட்டுள்ளார். அதற்கு நேரில் கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து தங்கக் கட்டிகளை எடுத்து வந்து கவிதாவிடம் கொடுத்துள்ளார். அவை ஜார்ஜ் மன்னர் உருவம், தாமரை சின்னங்கள் கொண்டவையாக இருந்தன. இவையெல்லாம் மன்னர் கால பழங்கால தங்கம். புதையலாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இவற்றின் சிறு பகுதியை எடுத்து சோதித்து பார்க்கையில் தங்கம் என்று கவிதா உணர்ந்தார். இதையடுத்து ரூ.4 லட்சம் என்று விலை கூறப்பட்டது. ஒருவழியாக பேசி ரூ.2 லட்சத்திற்கு கவிதா வாங்கிக் கொண்டார். ஒட்டுமொத்தமாக அனைத்து தங்கக் கட்டிகளையும் சோதித்து பார்க்கையில் அவை போலி என்று தெரியவந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கவிதா உடனே போலீசில் புகார் அளித்தார். அதற்குள் லட்சுமி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காரமடை பகுதியில் வேறொரு பெண்ணிடம் போலி தங்கக் கட்டிகளை விற்க முயற்சித்த போது லட்சுமி போலீசில் பிடிபட்டார். அவரை கைது செய்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக