Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

நெல்லையில் சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் தலைதுண்டித்து கொலை..!

 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நெல்லை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை காதலித்து திருமணமா செய்துகொண்ட வாலிபரை பெண் வீட்டார் வெட்டி கொலை செய்துள்ள சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி: நாங்குநேரி அருகே 17 வயது சிறுமியை பெற்றோர் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த வாலிபரை சமாதானம் பேசுவதாக கூறி தலை துண்டித்து கொலை செய்த பெண் வீட்டார் தலை மறைவு.

நாங்குநேரியை அடுத்த மறுகால் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்ணிற்கு 17 வயதே ஆவதால் இவர்களது காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை.

அதே சமயம் சிறுமியும் நம்பிராஜை பிரிய மறுத்துள்ளார். இந்நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் நெல்லை டவுன் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இவர்களது திருமணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் அவர்கள் நம்பிராஜை சமாதானம் பேசுவதாக கூறி குறுக்குத்துறை ரயில் நிலையம் அருகே அழைத்துள்ளனர். வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நம்பிராஜ் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் நம்பிராஜ் வீடு திரும்பவில்லை.

கணவனுக்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு நம்பிராஜின் மரண செய்தி மட்டுமே வந்தது. குறுக்குத்துறை ரயில்வே நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நம்பிராஜ் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து விரைந்த நெல்லை ரயில்வே காவல் துறை மற்றும் டவுன் போலீசார் நம்பிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் சகோதரர்கள் நம்பிராஜை சமாதானம் செய்வதாக கூறி அழைத்து வந்து வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவர்களை நெல்லை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக