இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
பசுமையான புல்வெளியில் நிறைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பசுக்கள் இருந்த
இடத்தில் கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்து தின்றன.
கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகிலும் ஏறி நிற்கும். அதனுடைய வாய் அருகிலும்
செல்லும். இதுபோல கொக்குகள் செய்வதால் மாடுகளுக்கு தொந்தரவாக இருக்கும். அந்தக்
கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்கு கொக்குகளின் இந்த செயல் பிடிக்கவில்லை.
ஒருநாள்
கோபம் கொண்ட அந்தப் பசு கொக்குகளை கண்டித்தது. நான் புற்களை மேயும் இடத்தில்
நீங்கள் நின்றுகொண்டு எனக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்தது. அதற்கு
கொக்கு இல்லை நண்பா! எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள்
மறைந்துகொள்ளும் எங்களால் அவைகளை எளிதாக பிடிக்க முடியாது.
ஆனால்,
நீங்கள் புற்களை மேயும் போது உங்கள் மூச்சுக்காற்று பட்டு புற்கள் அசையும்.
அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப்
பிடித்து உண்டு எங்களின் பசியை போக்கிக் கொள்வோம். உங்களுக்கு இடைஞ்சல்
கொடுக்கமாட்டோம் என்று கொக்கு பணிவுடன் கூறியது.
அதற்கு
பசு, அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்து உண்ண நாங்கள் உதவணுமா? முடியவே
முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.
கடைசியாக நான் உங்கள் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே
வரக்கூடாது. மீறி வந்தீர்கள் என்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம்
செய்துவிடுவேன் ஜாக்கிரதை என்று கடும் கோபத்தோடு அந்தப் பசு கொக்குகளை
விரட்டியடித்தது. இதனால், அந்த கொக்குகளும் பயந்தோடியது.
அன்றிலிருந்து
அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை
தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், பார்த்தாயா நண்பா, என்பக்கம்
எந்த கொக்கும் வருவதில்லை. எந்த தொந்தரவும் தருவதில்லை. நிம்மதியாக நான் இங்கு
புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான்
உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன என்று கூறியது.
அதைக்
கேட்ட மற்றொரு பசு நீ சொல்வதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லை
என்று கூறியது. சரி உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு அந்தப் பசு மேயத் தொடங்கியது.
சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து
கொண்டிருந்தது. அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்தது.
உடனே
பசு மூச்சுவிட முடியாமலும் பயங்கர வலியாலும் அலறித் துடித்தது. அருகில் அமர்ந்து
இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து, பசு நண்பா எதற்காக இப்படி
கத்துகிறாய்? என்று கேட்டது. அதற்கு அந்தப் பசு என் மூக்கினுள் ஏதோ பூச்சி
நுழைந்துவிட்டது. வலி தாங்க முடியவில்லை என்றது. கவலைப்படாதே நண்பா, கீழே
படுத்துக்கொள் நான் பார்க்கிறேன் என்றது கொக்கு.
பசு
சாய்ந்து படுத்ததும் பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு ஒன்றுமில்லை நண்பா பூச்சி
உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ எடுத்துவிடுகிறேன் என்ற கொக்கு
தனது நீண்ட அலகால் மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியே போட்டது. உடனே
பசுவின் வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது.
நண்பா
உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காதபோதும், எனக்கு ஆபத்து என்று
தெரிந்தவுடன் எனக்கு உதவி செய்துவிட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள்
புகுந்து விடக்கூடாது என்ற இயற்கையின் நியதியால்தான், நீங்கள் எங்களுடன் அமர்ந்து
இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள். இதை நான் இப்போது தான் புரிந்து கொண்டேன்.
என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட
வேண்டும் என்று பசு பணிவுடன் கேட்டது. அன்றிலிருந்து அந்தப் பசுவும், கொக்குகளும்
ஒன்றாக இருந்தனர்.
நீதி :
எது
நடந்தாலும் எல்லாம் நன்மைக்காகத்தான் என்று நினைத்து செயல்பட்டால் தீவினைகள்
ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக