இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை பல்லாவரம் அருகே தவறான ஊசி போட்டதால்
இளம்பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி
வருகிறார்கள்.
நித்யா என்பவர் அனகாபுத்தூரில் வசித்து
வருகிறார் இவருக்கு சில நாட்களாக இருமல் பிரச்சினை இருந்து வருகிறது, அதற்காக அதே
பகுதியில் உள்ள ஜெயம் என்ற கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக நித்யாவை அழைத்து
சென்றுள்ளார்கள் பெற்றோர்கள்.
அங்கு சுஜாதா கருணாகரன் என்ற பெண் மருத்துவர்
அந்த இளம்பெண்ணிற்கு இருமலுக்கான கையில் ஊசி போட்டுள்ளார் ஊசி போட்ட சில
நிமிடங்களிலேயே அந்த இளம் பெண்ணிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி
விழுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
பின்பு அந்தப் பெண் மருத்துவர் தனியார்
மருத்துவமனை ஜெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார் அதனால்
நித்யாவை அழைத்து சென்றுள்ளார்கள் பெற்றோர்கள், ஆனால் அங்கு அனுமதிக்க மறுப்பு
தெரிவித்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு நித்தியா அரை மணி நேரத்திற்கு முன்பாகவே
உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்,
தவறான ஊசி போட்டதால் உயிரிழப்பு நேர்ந்ததாக சங்கர் நகர் காவல் நிலையத்தில்
உறவினர்கள் புகார் அளித்துள்ளார்கள், சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக