இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே வழங்கப்படும். கூடுதலாக லட்டு வேண்டுமென்றாலும், தலா ஒன்றுக்கு ரூ. 50 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
திருப்பதி என்றாலே லட்டும், மொட்டையும்தான்
நமது நினைவுக்கு வரும். நாடு முழுவதும் பிரபலமான திருப்பதி லட்டு முன் நாட்களில்
கைக்குள் அடங்காத அளவில் பெரிதாக இருக்கும் என்ற கதைகள் இப்போதும் பெரியோர்களால் கூறப்படும்.
இப்போதைய நேரத்தில் லட்டு அளவு குறைந்த காணப்பட்டாலும், ஒரு லட்டு தயாரிக்க ரூ. 40
செலவாகிறது எனத் தேவஸ்தான கூறுகிறது.
திருப்பதி கோயிலுக்கு மலை அடிவாரத்திலிருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் செல்கிறார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், சர்வதேச தரிசனம், திவ்ய தரிசனம் என 3 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு, சலுகை விலையில் நபர் ஒருவருக்கு 4 லட்டுகள் ரூ. 70க்கு வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி லட்டுகள் சலுகை விலையில் வழங்கப்படுவதால், ரூ. 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக, தேவஸ்தானம் கூறியுள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் சாமி தரிசனம் செய்யும் ஒருவருக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கிவிட்டு, கூடுதலாகப் பக்தர்களுக்குத் தேவைப்படும் லட்டுகளுக்கு ரூ. 50 வசூலிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பக்தர் ஒருவர் தனக்கு எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த நிலை இப்போது தொடரும் எனத் தேவஸ்தான அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு விவகாரத்தில் விரைவில், புதிய முடிவுகள் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ்நாடு அரசு சார்பாக சாமி தரிசனம் செய்யும் அனைவருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் காரணமாக, மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வருகை தருவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக