இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தெற்கு ரயில்வேயில் தொடரும் மொழி சர்ச்சை...
தென்னக ரயில்வே தனது அலுவலக மொழியாக
ஆங்கிலம் அல்லது இந்தியைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலத்தின்
மொழிகளையும் ரயில்வேத்துறை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறது.
இதன்படி, தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் மொழிக்குப் பதிலாக மலையாள மொழி பதிவிடப்பட்டு பயணிகளை ரயில்வேத்துறை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன் காரணமாக, ரயில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் குழுப்பமடைந்தனர்.
திருச்சியில், ரயில்வே முன்பதிவு விண்ணப்பப் படிவத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மலையாள மொழியில் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கமாக, தமிழ் மொழியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பழக்கப்பட்டவர்கள், அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
பெரும்பாலானோர் படிவத்திலிருந்த 3 மொழிகளும் தெரியாமல், விண்ணப்பத்தைக் கையில் வைத்த கொண்டு விழித்துக் கொண்டிருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக முன் நாட்களில் நடந்த போராட்டத்தில் திருச்சி தலைநகராக விளங்கியது. இவ்வாறு மொழிப் போராட்டத்தின் முக்கிய நகரமாக விளங்கும் திருச்சியில் ரயில் முன்பதிவு விண்ணப்பப் படிவம் மலையாளத்தில் வழங்கப்பட்டது, தமிழ் மொழி ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக