இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆதார்
அட்டையில் முகவரி மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு
தளர்த்தியுள்ளது!!..
இந்தியக்
குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை
வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை,
ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி,
ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண்
என்னை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
மாநில
அரசு மானியம் வழங்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் பயனாளிகளை ஆதார் மூலமாக
தேர்ந்தெடுக்க இச்சட்டம் வகை செய்கிறது. பயோமெட்ரிக் அடையாளம் பொருந்திய ஆதார்
அட்டைகளால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள்
நேரடியாக மக்களை சென்றடைய இது வழிவகுக்கும்.
இந்நிலையில்,
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு
தளர்த்தியுள்ளது. இதன் மூலம், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுவோர். வேலை
நிமித்தம் வேறு மாநிலங்களுக்கு செல்வோர், வீடு மாறுவோர் பெரிதும் பயன்பெறுவார்கள்.
தற்போது அவர்கள் வசிக்கும் புதிய முகவரியை மட்டும் கொடுத்து, அதே ஆதார் எண்ணை
அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு நேற்று
பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், சுயவிளக்கம் ஒன்றுடன் புதிய முகவரியுடன் ஆதார்
எண்ணை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
தளர்வு காரணமாக, நிரந்தர முகவரி, தற்போதைய பணியிட முகவரி என இரண்டு முகவரிகளை
பயன்படுத்த முடியும். புதிய இடத்தில் வங்கிக்கணக்கு துவங்க இந்த சட்ட திருத்தம்
உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக