இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல...
சமையலில் அதிக அனுபவம் கண்டவர்களும்கூட, சமையல் நன்றாக வர வேண்டுமே...
சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே... என்கிற அக்கறையுடன்தான்
ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை
வாரிவிடுவது உண்டு.
'அடடா... காரம் தூக்கலா இருக்கே?" என்பது
போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை
செய்கிறார்கள்?" என்பது போன்ற சந்தேகங்களும் எழும்.
இந்த கவலை இனி வேண்டாம்... நீங்களும் சமையலில்
சிறந்து விளங்க உங்களுக்கான சில குறிப்புகள்...
உளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து,
தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால் நன்கு முறுகலான தோசை கிடைக்கும்.
மாவின் பதம் சாதா தோசை செய்வது போல் செய்யலாம்.
தக்காளி சட்னி செய்யும்போது கொஞ்சம் எள்ளையும்
வறுத்து கலந்து அரைத்தால் நன்கு ருசியாக இருக்கும்.
பாசிப்பருப்பு பாயசம் செய்யும்போது வெல்லத்தை
கெட்டி பாகாக காய்ச்சிய பின் செய்தால் பாயசம் ருசியாக இருக்கும். மறுநாள்
இருந்தாலும் கெட்டுப்போகாது.
அடைக்கு ஊற வைக்கும்போது பயிறுகளை ஊற வைத்து
அரைத்தால் சத்து அதிகமாக இருக்கும். கொஞ்சம் கொள்ளுப்பருப்பையும் சேர்த்து
கொள்ளவும்.
ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன்
பச்சை மிளகாயும் வதக்கி, வத்தல் குழம்பில் கலந்தால் வாசனையாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது அதில் பிரெட்டையும்
போட்டு பிசைந்து பூரி செய்தால் உப்பியும், நன்கு மொறுமொறுப்பாகவும் வரும்.
பாகற்காய் பொரியல் செய்யும்போது கொஞ்சம் தயிர்
ஊற்றி ஊறவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.
பஜ்ஜிக்கு எல்லா காய்களையும் போட்டும்
செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து
இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே
இருக்கும் காய்கள் வேகாது.
சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த
பொருட்களை போடாமல், கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும்.
அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும்
பாத்திரத்திற்கு மேல் தீ எரியக்கூடாது.
கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல்
செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக இருக்கும். எதுவுமே நம்
கையில்தான் இருக்கிறது. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையலின்
ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக