Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 நவம்பர், 2019

யேசுவின் அற்புதங்களுக்கு காரணம் இறைத்துவமா ESP யா? – (ESP 09)



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இறுதியாக இந்த பகுதியில் ESP சக்தியுடைய மனிதரான அல்ஹாசர் பற்றி பார்த்திருந்தோம். தொடர்ச்சியாக இயேசு நாதரின் இறைத்தன்மை பற்றி பேசலாம் என கூறியிருந்தேன். இன்று அப்பகுதியை பார்க்கலாம். ( இது எந்த  மதத்தையும் இழிவு படுத்துவதற்காக எழுதப்படுவதல்ல. ESP எனும் சக்தியை எமது இறைவர்களாகவும் இறைத்தூதர்களாகவும் கூறப்படுபவர்களின் சக்தியுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு ஆய்வே. இக் கருத்துக்களை எந்த மதத்தையும் இழிவு படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டாம்.)
யேசு பற்றி பார்த்தோமானால், இறைவனின் மகனாக / தேவ தூதராக சித்தரிக்கப்படுகிறார். அவரின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோமானால். அவரின் அற்புதங்கள் / விசேஷ  சக்திகள் 30 வயதிற்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. அவர் இறைவனின் மகனாக காட்டப்பட்ட போதும், பிறப்பில் இருந்து அவருக்கு விசேஷ சக்தி இருந்ததாக கட்டப்படவில்லை. ஒரு குறித்த வயதின் பின்னரே அவரின் அற்புத செயல்கள் வெளிப்பட்டுள்ளன. இது நாம் ஏற்கனவே பார்த்த அல்ஹாசர், டொங்லஸ் ஹியூம் போன்ற ESP மனிதர்களைப்போன்ற ஒரு சம்பவமே. அதாவது, அவர்களும் பிறக்கையிலேயே சக்திகளுடன் பிறக்கவில்லை திடீரென ஏற்பட்ட விசேஷ சக்திகளே அவர்களை ESP மனிதர்களாக அடையாளப்படுத்தின.
இன்னோர் வகையில் சிந்தித்தால், யேசு ஒரு விசேஷ நாளில் பிறந்ததாக (வால் நட்சத்திர போக்கு) குறிப்பிடப்படுகிறது. அந்த விசேஷ நாளில் பிறந்தால் இவ்வாறான விசேஷ சக்திகள் தானாகவே கிடைக்கும் எனும் ஒரு விதி / ஊக்டம் / தீர்க்கம் இருக்கலாம். காரணம், இந்து மற்றும் இஸ்லாமிய(?) வரலாறு(?) சம்பவங்களிலும் விசேஷ சக்தி வாய்ந்தவர்களின் பிறப்பு ஒரு விசேஷதினத்தில் இருந்ததாக காட்டப்படுகின்றது. இவை பற்றி வேறு ஒரு பகுதியில் பின்னர் மேலும் ஆராயலாம்.
இதே போன்றே, சம்பந்தர் உட்பட 64 நாயன்மார்களில் பலரின் வாழ்க்கை / அற்புத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்கள் அனைவரும் ESP மனிதர்களாக இருந்திருப்பார்கள் என்பதே எனதும் என்போன்றோரதும் கருத்து. “இறைவன் / கடவுள்” என்று குறிக்கப்படும் சக்தி மிகப்பெரிய சக்தி. இப்போதைய நிலை வரை விளக்கம் கூறவேண்டும் என்றால், “பிக்பாங்” எனப்படும் பெரு வெடிப்பிற்கு காரணமும் அதன் நோக்கமும் அதற்கு முட்பட்ட நிலையுமே “இறைவன்” எனலாம். அதாவது நமது படைப்பின் காரணம் அறிந்தவரை இறைவன் எனலாம். அதை விடுத்து, எமது பூமியில் நடைபெற்ற / பெறும் சம்பவங்களை வைத்து இறைத்துவம் அளிப்பது என்பது எமது அறிவினால் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருக்கின்றது. காரணம், பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளியே பூமியும் மனித வாழ்வும். அத்துளியுடன் சம்பந்த பட்ட சம்பவங்களை வைத்துக்கொண்டு இறைத்துவத்தை தீர்மானிப்பது என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இறைத்துவம் என்பது மிகப்பெரிய சக்தி அது என்ன? எவ்வாறு செயற்படும் எனும் ஊகத்தை பின் தொடர்களில் பார்க்கலாம்.
இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய முற்பட்டால் ஒரு விவாதத்திற்கு உரிய பகுதிக்குள் செல்ல வேண்டும். செல்வோம்…
யேசுவின் வாழ்க்கை சம்பவங்கள் பைபிளை  அடிப்படையாக கொண்டே விளக்கப்படுகின்றன. பைபிளில் யேசுவின் 12 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட சுமார் 18 வருட கால வாழ்க்கை நிகழ்வுகளுக்குரிய குறிப்புக்கள் இல்லை. இக்காலப்பகுதி “தொலைந்து போன ஆண்டுகள் என பொருள் படும்வகையில் “Jesus’ Lost Years” ” என அழைக்கப்படுகிறது.
இக் குறித்த காலப்பகுதியில் யேசு இந்தியாவிற்கு சென்றதாகவும், இமைய மலைப்பகுதியில் தியானமூடாக தனது சக்தியை பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு. அப் பகுதியை பார்த்தோமானால்…
யேசுவின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட இடங்கள் சில பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
யேசு பெதலஹேம் (Bethlehem) இல் பிறந்தார்.(Luke 2:1-20)
ஜெருசலேமிறு பயணித்தார். (Luke 2:22-28)
புனிதர் ஒருவரின் பேரில் யேசு எகிப்து நாட்டில் பாதுகாப்பாக இருந்தார். (Matthew 2:1-12 / Matthew 2:15)
யேசுவின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தையாக(?) கருதப்படும் மேரி மற்றும் ஜோசப்பின் சொந்த இடமான நஷரத் இற்கு 12 வயதில் குடிபெயர்ந்தார்.(Matthew 2:19-23)
இவையே
பைபிளில் குறிக்கப்பட்டிருக்கும் முக்கிய இடங்களாக கூறப்படுகிறது.
இதில் எங்கும், யேசு இந்தியாவிற்கு பயணித்ததாக கூறப்படவில்லை. (அப்போது இந்தியா “இந்தியா” என்ற பெயரில் இல்லை என்றபோதும், அப் பகுதிக்கு பயணித்ததாக பைபிளின் எப் பகுதியிலும் குறிப்புக்கள் இல்லை.)
ஆனால், எகிப்துவிற்கு யேசு பயணித்திருப்பது ஒரு ஆர்வமான பகுதி.
காரணம், எகிப்தில் இந்தியா பற்றிய பல குறிப்புக்கள் மற்றும் அழிந்துபோன குமரிக்கண்ட குறிப்புக்கள் பல காக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்திய பகுதியூடாக வந்த குறிப்புக்களைக்கொண்டே எகிப்திய மன்னர் ஒருவரால் அடிப்படை மதம் (யூதமதம்(?)) ஒன்று உருவாக்கப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. இவை பற்றி ஏற்கனவே “லெமூரியா” பதிவுகளில் பார்ப்போம்
மேலும், அக் காலகட்டத்திலும் அதற்கு பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கும் (இன்றும்) இந்தியா என்பது ஒரு விசேஷ பகுதியாக அனைவராலும் தேடப்படும் பகுதியாக இருதுவருகிறது. (அமெரிக்காவிற்கு கோலாம்பஸ் சென்றதும் இந்தியாவை தேடியே). காரணம் இந்தியா என்பது மாபெரும் நாகரீகமான குமரிக்கண்ட வாழ்வின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு மர்மதேசமாக இருந்துள்ளது. (இப்போதும், ஆனால் ஆராய்வு இன்றி அல்லது ஆய்வுகள் முடக்கப்பட்டு.)
ஆகவே, யேசு அவ்வாறான ஒரு தேசத்தை நாடிச்சென்றிருக்கலாம் என கூறமுடியும். மேலும், Holger Kersten எனும் ஆய்வாளர் யேசு இந்தியாவிற்கு சென்றார் என்பதற்கு சில பல ஆதாரங்களை தனது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். ( His Unknown Life Before and After the Crucifixion (1994) , The Jesus Conspiracy)

Nicolas Notovitch எனும் ரஷ்ய ஆய்வாளார் 19 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பகுதியில் நடத்திய தேடலில் இஸா(Issa) எனும் புனிதரை பற்றிய குறிப்புக்களை உதாரணம் காட்டி அவரே யேசு என நிறுவ முயன்றுள்ளார். ( Issa நபி எனவே இஸ்லாமியர்கள் யேசுவை குறிக்கிறார்கள்(?))
ஆனால், Nicolas Notovitch திபெத்திய பகுதியில் ஆய்வு செய்யவே இல்லை என J. Archibald Douglas எனும் ஆய்வாளர் ஆதாரங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு  தகவலாக, யேவின் பிறப்பின் போது வந்த ஞானி (the Magi) கிழக்கு பகுதியில் இருந்து வந்தவராக குறிப்புக்கள் உள்ளன. அவர் ஒரு இந்திய இமையமலை பகுதியில் வாழ்ந்த ஞானி என இந்து மத பரமஹம்ச யோகானந்தா குறிப்பிட்டுள்ளார். அதாவது, விசேஷ  தினத்தில் பிறந்த யேசுவிற்கு சக்திக்கான வழிகாட்டியாக அவர் இருந்தார் என வாதிட்டுள்ளார்.
இன்னோர் சாராரின் கருத்துப்படி யேசு 108 வயதுவரை வாழ்ந்ததாகவும். 33 வயதிற்குப்பின்னர் மீண்டும் அவர் இமையமலை பிரதேசத்தில் வாழ்ந்ததாகவும் ஒரு கதை உள்ளது.
எது எப்படியானாலும், யேசுவிடம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லாத சில விசேஷ சக்திகள் இருந்துள்ளன. அச் சக்திகள் ESP எனும் பதத்திற்குள் உள்ளடங்கக்கூடிய சக்திகளே அன்றி, தனி இறைத்துவம் என குறிக்கும் சக்திகளாக கருதமுடியாது என்பதே எனது கருத்து.
இச் சிக்கலான ஒரு சம்பவத்தை அடுத்து, ESP ஐ எவ்வாறு அதிகரிக்கலாம்… “மந்திரம்” என குறிக்கப்படும் இந்துமத சொல் எவ்வாறானது என்பதை எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இதை வைத்து இஸ்லாம் மற்றும் இந்து நண்பர்கள் ஆக்க பூர்வமற்ற விவாதங்களை கருத்திடுவதை தவிர்த்துக்கொள்ளவும். நன்றி. மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக